தங்கம் மீதான இறக்குமதி வரியை கிடுகிடுவென உயர்த்திய மத்திய அரசு
ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால் தங்கத்தின் இறக்குமதி வரியை கிடுகிடுவென மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
இந்தியாவின் ரூபாய் மதிப்பு கடந்த சில நாட்களாக வீழ்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது. இதனால், ஏற்படும் பொருளாதார இழப்புகளை சரிசெய்யும் பொருட்டு தீவிர ஆலோசனையில் ஈடுபட்ட மத்திய அரசு, உடனடியாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்த முடிவு செய்தது. அதன்படி இன்று வெளியாகியுள்ள அறிவிப்பில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10.75 விழுக்காட்டில் இருந்து 15 % உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஜூன் 30 ஆம் தேதியில் இருந்து இந்த வரி உயர்வு நடைமுறைக்கு பொருந்தும் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் படிக்க | LPG Cylinder: LPG சிலிண்டர் விலை குறைஞ்சாச்சு; முதல் நாளே மக்கள் குஷி
சுங்கவரியும் அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு வரி தங்கத்தின் மீதான சுங்கவரி 7.5 விழுக்காடாக இருந்தது. தற்போது அது 12.5% ஆக உயர்ந்துள்ளது. தங்கத்தைப் பொறுத்தவரை உலகிலேயே அதிக இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இருப்பினும் நாடு முழுவதும் நிலவும் தங்கத்துக்கான டிமாண்ட் காரணமாக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் தங்கம் மொத்தம் 107 டன் இறக்குமதி செய்யப்பட்டு. ஜூன் மாதத்திலும் இறக்குமதி கணிசமான அதிக அளவில் உள்ளது.
தொடர்ச்சியாக தங்கம் இறக்குமதி அதிகரிப்பு நடப்பு கணக்கு பற்றாக்குறையில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொடங்கியதில் இருந்து இந்தியாவில் தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கம் இறக்குமதியானது 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிகளவில் இறக்குமதி செய்யப்பட்டது.
மேலும் படிக்க | New Wage Code: சம்பள வர்க்கத்துக்கு சூப்பர் நியூஸ், EPF-ல் சேரும் 1 கோடி ரூபாய்
இந்த வரி விதிப்பு தங்கத்தின் மீதான இறக்குமதியை கணிசமான அளவில் குறைக்கும் என மத்திய அரசு நம்புகிறது. இதற்கு முன்பும் பலமுறை சில பொருட்களின் இறக்குமதியைக் குறைக்க இத்தகைய வரி விதிப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. மத்திய அரசின் வரி விதிப்பால், உலக நாடுகளில் தங்கம் விலை குறைந்திருக்கும் போதிலும் இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR