எல்லையில் பாகிஸ்தான் தரப்பில் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது. அதற்கு தகுந்த பதிலடி இந்திய ராணுவம் கொடுத்து வருகிறது என ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று முப்படை படைகளை சேர்ந்த தலைமை அதிகாரிகள் கூட்டாக பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினர். அதில் பாக்கிஸ்தானுடனான தாக்குதலுக்கும், பயங்கரவாத முகாம்களை தாக்கவும் இந்தியா தயாராக உள்ளது என்று கூறினார்கள். 


இந்திய இராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.எஸ். மஹால், பாகிஸ்தான் தரப்பில் தான் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. எல்லையில் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தப்படுகிறது. எதிரி விதி மீறினால், அவர்களை சமாளிக்க இந்தியா எந்த சூழ்நிலையையும் தயாராக உள்ளது எக்கூறினார். 


இந்திய விமானப்படை அதிகாரி, எந்த பாதுகாப்பு சவாலையும் சமாளிக்க தயாராக உள்ளோம். எந்தவித ஊடுருவலையும் முறியடிக்கவும், தாக்கவும் விமானபடைப்பிரிவுகள் தயாராக உள்ளது எனக் கூறினார்.


அதே நேரத்தில் இந்திய கடற்படை அதிகாரி, கடற்பகுதியில் பாக்கிஸ்தானின் எந்தத் தாக்குதலையும், முயற்ச்சியையும் சமாளிக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்து ரெடியாக இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.