விரைவில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சுப்காங்கி ஸ்வரூப், கடல் மார்க்கம் விமானத்தில் பறக்க உள்ளார். கடற்படை ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் பிரிவில் முதல் முறையாக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் சுப்காங்கி ஸ்வரூப், ஐதராபாத்தில் உள்ள விமானப் படை பயிற்சி அகாடமிக்கு அனுப்பப்படுவார். இதைக்குறித்து சுப்காங்கி ஸ்வரூப் கூறுகையில், இது என் நீண்ட நாள் கனவு. என் கனவு நிறைவேறியுள்ளது. இது ஒரு வாய்ப்பு மட்டுமல்ல, மாபெரும் கடமை கூட எனக் கூறினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேபோல, புது டெல்லியிலிருந்து அஸ்தா செகால், புதுச்சேரி சேர்ந்த ரூபா மற்றும் கேரளாவை சேர்ந்த சக்தி மாயா ஆகிய மூவரும் கடற்படை ஆணையம் (என்.ஏ.ஐ.) பிரிவில் நியமிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரிகள் ஆவார்கள்.


இவர்கள் கடற்படை விமான நிலையத்தில், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளாகவும், தகவல் தொடர்பு மற்றும் ஆயுதங்களுக்கான விமானப் பொறுப்பாளர்களாகவும், கண்காணிப்பாளர்களாகவும் இருப்பார்கள் என தெற்கு கடற்படை செய்தித் தொடர்பாளர் தளபதி ஸ்ரீதர் வார்ரியர் தெரிவித்துள்ளார். மேலும் இவர்களுக்கு தேவையான தொழில் முறை பயிற்ச்சிகள் அளிக்கப்படும். பயிற்ச்சி நிறைவு பெற்றவுடன், பணியில் அமர்த்துப்படுவார்கள் எனவும் கூறினார்.