குடியரசு தின விழாவில் ஆண்டுதோறும், வெளிநாட்டு தலைவர்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும். கடந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், இந்த வருட குடியரசு தின (Republic Day) விழாவில் கலந்து கொள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.


ஆனால், பிரிட்டனில் உருமாறிய கொரோனா (Corona Virus) மிக வேகமாக பரவி வரும் நிலையில், அங்கு கடுமையான லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அங்கு வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளதால், அவர் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதை அடுத்து அவரது இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டது. அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் (PM Narendra Modi) தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளாததற்கு வருத்தமும் தெரிவித்தார்.


இந்நிலையில், 2021ம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக சுரிநாம் நாட்டின் அதிபர் சந்திரிகா பிரசாத் சந்தோகி (Chandrikapersad Santokhi) கலந்துகொள்வார் என தகவல்கள்தெரிவிக்கின்றன.


சமீபத்தில் நடைபெற்ற  வெளிநாடு வாழ் இந்தியர் தின மாநாட்டிலும் அதிபர் சந்திரிகா பிரசாத் சந்தோகி, சிறப்பு விருந்தினராக  கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.  2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதிபர் சந்திரிகா பிரசாத் சந்தோகி, சுரிநாமின் அதிபராக பங்கேற்றார். தென் ஆப்பிரிக்க நாடான சுரிநாம், மக்கள் தொகையிலும் பரப்பளவிலும் சிறிய நாடு. இதில் உள்ள 5.87 லடம் மக்கள் தொகையில், சுமார் 28% பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள்.


ALSO READ | இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் ரத்து


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR