இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் ரத்து

இங்கிலாந்து பிரதமர், இந்திய குடியரசு தின விழாவில் கவுரவ விருந்தினராக கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்து. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 5, 2021, 06:39 PM IST
  • இங்கிலாந்து பிரதமர், இந்திய குடியரசு தின விழாவில் கவுரவ விருந்தினராக கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்து.
  • பிரிட்டனில் உருமாறிய கொரோனா மிக வேகமாக பரவி வரும் நிலையில், அங்கு கடுமையான லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் ரத்து title=

இங்கிலாந்து பிரதமர், இந்திய குடியரசு தின விழாவில் கவுரவ விருந்தினராக கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்து. 

குடியரசு தின விழாவில் ஆண்டுதோறும், வெளிநாட்டு தலைவர்களுக்கு கவுரவ விருந்தினராக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும். அந்த வகையில், இந்த வருட குடியரசு தின (Republic Day) விழாவில் கலந்து கொள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், பிரிட்டனில் உருமாறிய கொரோனா (Corona Virus) மிக வேகமாக பரவி வரும் நிலையில், அங்கு கடுமையான லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு விழாவில் கவுரவ விருந்தினராக கலந்து கொள்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடன் (PM Narendra Modi) தொலைபேசியில் உரையாடிய, பிரதமர் போரிஸ் ஜான்சன், திட்டமிட்டபடி இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வர முடியாது என்பதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என கூறியதாக இங்கிலாந்து பத்திரிக்கை Downing Street கூறியதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது

அமைச்சரவை அலுவலக அமைச்சர் மைக்கேல் கோவ் ஒரு தொலைக்காட்சி சேனலிடம், இங்கிலாந்தில், மார்ச்31ம் தேதி வரை நீடிக்கலாம் என்றும்,  பிப்ரவரி 15 அன்று நிலைமை மறுஆய்வு செய்யப்படும் என்றும் கூறினார்.
இங்கிலாந்து பிரதமராக, போரிஸ் ஜான்சன் பதவி ஏற்றுக் கொண்ட பிறகு, அவர் இது வரை இந்தியா வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, குடியரசு தின விழாவில் பங்கேற்க போரிஸ் ஜான்சன் (Boris Johnson) ஆர்வமாக இருந்த நிலையில், காட்டுத் தீயாக பிரிட்டனில், மிக வேகமாக பரவி வரும் கொரோனா அங்கு வாழ்க்கையை பிரட்டி போட்டுள்ளதால், அவர் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

ALSO READ | கொச்சி-மங்களூரு குழாய் எரிவாயு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்: பிரதமர் மோடி
 

Trending News