உலகம் முழுவதிலும் பெற்றோர் தங்களது பிள்ளைகளின் படிப்புகாக எவ்வளவு செலவிடுகின்றனர் என்பதை அறிய, 'கல்வியின் மதிப்பு' என்ற பெயரில் எச்.எஸ்.பி.சி., வங்கி சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என 15 நாடுகளை சேர்ந்த, 8481 பெற்றோர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 


இந்த பட்டியலில் இந்தியா 13-வது இடத்தை பிடித்து உள்ளது. இந்திய பெற்றோர் தங்களுடைய ஒரு குழந்தையின் படிப்புக்காக 18909 அமெரிக்கா டாலர் செலவிடுகின்றனர் என கண்டறியப்பட்டு உள்ளது. 


* 89% பெற்றோர் இந்தியாவை பொறுத்தவரை தங்களது பிள்ளைகள் விரும்பி துறையில் முழு நேர வேலை வாய்ப்பை பெற முதுகலை பட்டம் பெறுவது அவசியம் என கருதுகின்றனர்.


* 59% இந்திய பெற்றோர் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை பிள்ளைகளின் கல்விக்காக செலவிடுகின்றனர். 


* 48% பெற்றோர் பொது சேமிப்பு, முதலீடுகள் மற்றும் காப்பீடு ஆகியவற்றில் இருந்தும், 


* 38% பெற்றோர் கல்விக்கான பிரத்யேக சேமிப்பு மற்றும் காப்பீடுகள் மூலமும் பிள்ளைகளின் கல்விக்காக செலவு செய்கின்றனர்.


என்கிறது அந்த ஆய்வு.