குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 17-ம் தேதி நடக்கும் என தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது.


இதனையடுத்து, இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறியதாவது:-


ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 14-ம் தேதி துவங்கி ஜூன் 28-ம் தேதி வரை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற ஜூலை 1-ம் தேதி கடைசி நாள் ஆகும். 


குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 17-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூலை 20-ல் நடைபெறும்.


ஜனாதிபதியை தேர்வு செய்ய ஆளும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு எதிராக சக்தி வாய்ந்த பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.