ரயில் பயணிகள் தங்களின் புகார்களை தெரிவிக்க புதிய செயலி ஒன்றை இந்திய ரயில்வே துறை அறிமுகபடுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரயில் பயணத்தின் போது பயணிகள் சந்திக்கும் இன்னல்கள் தொடர்பாக புகார்களை  தெரிவிக்கும் வகையில் புதிய செயலி ஒன்றை இந்திய ரயில்வே துறை அறிமுகம் செய்துள்ளது. 


இந்த செயலி ட்விட்டர், முகநூல், மற்றும் உதவிக்கான தொடர்பு எண்கள் மூலம் புகார் அளிப்பதற்கு பதிலாக RAIL M.A.D.A.D என்ற புதிய செயலியை ரயில்வே துறை அறிமுகபடுத்தியுள்ளது. இதில் ரயில் பயணத்தின் போது வழங்கப்படும் உணவு, கழிப்பறை தொடர்பான புகார்கள் தவிர அவசர உதவிக்கும் அழைக்கும் வகையில் இச்செயலியில் வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. 


அதுமட்டுமின்றி, நாம் அளிக்கும் புகாரின் நிலை குறித்து அறிந்து கொள்ளும் வசதியும் இதில் செய்யப்பட்டுள்ளது. ரயில் பயணத்தின் போது வழங்கப்படும் PNR எண் மூலம் புகாரை பதிவு செய்யலாம் என இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.