புது டெல்லி: ஏப்ரல் 14 ஆம் தேதிக்குள் அனைத்து வழக்கமான பயணிகளின் ரயில்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளின் முழு முன்பதிவு தொகையையும் திருப்பித் தர இந்திய ரயில்வே (Indian Railway) முடிவு செய்துள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பு வழக்கமான பயணிகள் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படாது என்று ரயில்வே சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது இந்தியன் ரயில்வே, 230 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை மட்டுமே "சிறப்பு ரயில்களாக" இயக்குகிறது. எவ்வாறாயினும், கொரோனா காரணமாக எந்தவொரு கோரிக்கையையும் பூர்த்தி செய்ய அதிக ரயில்கள் இயக்க வாய்ப்பு இருப்பதாக ரயில்வே அமைச்சகம் பலமுறை கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏப்ரல் 14 அல்லது அதற்கு முன்னர் முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளையும் ரத்து செய்து டிக்கெட்டுகான பணத்தை முழுவதுமாக திரும்ப அளிப்பதற்கான முடிவை ரயில்வே அமைச்சகம் அனைத்து மண்டலங்களுக்கும் அறிக்கை வெளியிட்டது. 120 நாட்களுக்கு முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்ய ரயில்வே அனுமதி அளித்தது. தற்போதைய விதிகளின்படி, ரயில்வே நிர்வாகம் ரயில்களை ரத்துசெய்தால், பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்யத் தேவையில்லை, தானியங்கி திரும்பும் செயல்முறை தொடங்கும். 


தற்போது ஜூன் 30 வரை ரயில் சேவைகள் மூடப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. இப்போது இந்த காலக்கெடு மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.


ஆகஸ்ட் 15 க்குப் பிறகு ரயில்களை இயக்க முடியுமா?
ரயில்வே விதிகளின்படி, ஒரு ரயில் டிக்கெட்டை அதிகபட்சம் 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம். இப்போது, ​​ஏப்ரல் 14 மற்றும் அதற்கு முன்னரும் அனைத்து டிக்கெட்டுகளுக்கான பணம் திருப்பி தரப்படும் என ரயில்வே அறிவித்திருப்பது, ​​அதாவது ஆகஸ்ட் 15-க்கு முன்பு பயணம் செய்ய முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து டிக்கெட்டுகளும் பணம் திருப்பித் தரப்படும். ஆகஸ்ட் 15 க்குப் பிறகு ரயில்களை ரயில்வே இயக்குமா? என்பது இப்போதைக்கு எந்த தகவலும் இல்லை.


மேலும் சிறப்பு ரயில்கள் இயக்க முடியும்:
ஆதாரங்கள் அடிப்படையில், இப்போது தேவையை பூர்த்தி செய்ய இந்தியன் ரயில்வே கூடுதல் ரயில்கள் இயக்கக்கூடும். அதாவது அவை அனைத்தும் சிறப்பு ரயில்களின் பிரிவின் கீழ் இயங்கும். சுமார் 230 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இப்போது இயக்கப்படுகின்றன என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.