இந்தியன் ரயில்வே, சரக்குகளை அனுப்பும் வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக ஒரு போர்ட்டலைத் துவக்கியுள்ளது. இதன் மூலம், சரக்குகளை அனுப்பும் வாடிக்கையாளர்கள் நேரடியாக அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள முடியும். மேலும் அவர்களுக்கு ஏதாவது புகார் அளிக்க வேண்டுமானால், அதையும் அவர்கள் இந்த போர்டலின் மூலம் செய்யலாம்.  இந்தியன் ரயில்வே தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும் வரி வசூலை அதிகரிப்பதற்கும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரயில்வே வாரியத்தின் அறிவுறுத்தலின் பேரில், ரயில்வே தகவல் அமைப்புகள் மையம் (CRIS) குழு போக்குவரத்து வணிக மேம்பாட்டு (FBD Portal) போர்ட்டலைத் தயார் செய்துள்ளது.


ALSO READ: அனகொண்டா ஸ்டைலில் ரயில்.... அமர்க்களப்படுத்திய இந்தியன் ரயில்வே


ரயில்வே அமைச்சகத்தின் (Indian Railways) கூற்றுப்படி, எஃப்.பி.டி குறிப்பாக 'நுகர்வோருக்கு முன்னுரிமை’ என்ற கருத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், புதிய வாடிக்கையாளர்கள் ரயில்வேயின் போக்குவரத்து வணிகம் பற்றிய தகவல்களையும் பெற முடியும். ரயில்வேயின் போக்குவரத்து வணிகம் குறித்த தகவல்கள் இந்த போர்ட்டலில் வழங்கப்பட்டுள்ளன. போர்ட்டலை அணுகுவது மிகவும் எளிதானது.


இந்த தளத்தில் தற்போது இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அம்சங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு ஜி.ஐ.எஸ் அடிப்படையிலான கண்காணிப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம் அவர்கள் தங்கள் புகார்கள் குறித்து ரயில்வே அதிகாரிகளையும் தொடர்பு கொள்ளலாம்.


புதிய FBD போர்டல் (FBD Portal) ரயில்வே அதிகாரிகளை தொடர்பு கொள்ள சரக்குகள் அனுப்பும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல வழியை வகுத்துக் கொடுக்கும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு தங்கள் பொருட்களை அனுப்பி வைக்க அவர்களின் உதவியை நாட முடியும். இது தவிர, ரயில்வே உதவி என பொருள்படும் 'ரெயில்மதத்' புகார் தீர்வு போர்ட்டலும் புதிய FD போர்ட்டலுடன் இணைக்கப்பட்டுள்ளது.


ALSO READ: உலகின் முதல் சிறப்பு சுரங்கப்பாதையை உருவாக்கிய இந்தியன் ரயில்வே..


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR