இந்திய ரயில்வேயின் சூப்பர் திட்டங்கள்... Super App... வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்... இன்னும் பல..!!
இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில்வே நெட்வொர்க் ஆகும். இந்நிலையில், ரயில் பயணிகளுக்கு அனைத்துக்கும் ஒரே இடத்தில் தீர்வை வழங்கும் வகையில் ஒரு விரிவான `சூப்பர் செயலி`யை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது.
இந்திய ரயில்வே உலகின் நான்காவது பெரிய ரயில்வே நெட்வொர்க் ஆகும். இந்நிலையில், ரயில் பயணிகளுக்கு அனைத்துக்கும் ஒரே இடத்தில் தீர்வை வழங்கும் வகையில் ஒரு விரிவான 'சூப்பர் செயலி'யை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது. பயணச்சீட்டு முன்பதிவு செய்தல், டிக்கெட் ரத்து செய்தல், ரயில் போக்குவரத்து கண்காணிப்பு மற்றும் ரயில்வே தொடர்பான பிற பணிகள் தொடர்பாக பயணிகளுக்கான வசதி மற்றும் அணுகலை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை சூப்பர் செயலி வழங்கும்.
ரயில்வேயின் சில முக்கிய திட்டங்கள்
பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, ரயில்வேயில் 100 நாள் திட்டம் வகுக்கப்படுகிறது. ரயில்வேயின் இந்த திட்டத்தில், டிக்கெட்டை ரத்து செய்த 24 மணி நேரத்திற்குள் பணத்தை திரும்ப அளிக்க வகை செய்யும் திட்டமும் அடங்கும். மேலும் ரயில்வே பயணிகளுக்கான ஒவ்வொரு சேவையையும் எளிதாக்கும் புதிய 'சூப்பர் ஆப்' பயணிகளுக்கு அறிமுகப்படுத்தும் திட்டம் உள்ளது. ஜம்மு காஷ்மீரில் உதம்பூரை ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லாவை இணைக்கும் ரயில் பாதையின் கடைசி பகுதி விரைவில் திறக்கப்படும்.
பொது மக்கள் வசதிக்காக எடுக்கப்படும் நடவடிக்கை
ரயில்வே பொது மக்கள் வசதிக்காக வரும் காலங்களில், வந்தே பாரத் போன்ற விரைவு ரயில்களிலும் ஸ்லீப்பர் இருக்கைகள் வசதிகளை கொண்ட ரயில்களை அறிமுகம் செய்ய உள்ளது. இது தவிர, அகமதாபாத் மற்றும் மும்பையை இணைக்கும் புல்லட் ரயிலின் (அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் திட்டம்) பணிகளும் விரைவாக மேற்கொள்ளப்படும். புதிய அரசின் 100 நாள் செயல்திட்டத்தை தயாரிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், பல அமைச்சகங்கள் பொதுமக்களின் வசதிக்காக நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றன.
புதிய சூப்பர் செயலியை அறிமுகப்படுத்த திட்டம்
ரயில்வே புதிய சூப்பர் செயலியையும் அறிமுகப்படுத்த உள்ளது, இதன் மூலம் டிக்கெட் முன்பதிவு முதல் ரயில் கண்காணிப்பு வரை பல விஷயங்களை எளிதாக செய்ய முடியும். இது தவிர, ரத்து செய்த ரயில்வே டிக்கெட்டிற்கு 24 மணி நேரத்திற்குள் ரீபண்ட் வசதியை அளிப்பது தொடர்பான பணிகளையும் இந்திய ரயில்வே மேற்கொண்டு வருகிறது. டிக்கெட் ரத்து செய்தால் 24 மணி நேரத்திற்குள் பணத்தை திரும்ப பெறும் வசதியை ரயில்வே துறை வழங்க நடவடிக்கை எடுக்க உள்ளது. தற்போது பணத்தை திரும்ப பெற மூன்று நாட்கள் ஆகிறது.
11 லட்சம் கோடி முதலீடு
முதல் 100 நாட்களுக்குள் பயணிகளுக்கான PM Rail Yatri இன்சூரன்ஸ் திட்டத்தை தொடங்க ரயில்வே இலக்கு வைத்துள்ளது. இது தவிர, ரயில்வே கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த 40,900 கி.மீ., நீளமுள்ள மூன்று பொருளாதார வழித்தடங்களை அமைக்க, 11 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | சட்டவிரோத கடன் செயலிகளுக்கு ஆப்பு வைக்கும் ஆர்பிஐ! புதிய நடைமுறை விரைவில்
ஜம்முவில் இருந்து காஷ்மீர் வரையிலான ரயில் சேவைகள்
ரயில்வேயின் முக்கிய திட்டங்களில் உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டம் முடிந்ததும் ஜம்முவிலிருந்து காஷ்மீர் வரை ரயில்கள் இயக்கப்படும். யுஎஸ்பிஆர்எல் திட்டத்தின் இந்தப் பகுதியில் உலகின் மிக உயரமான ரயில்வே பாலமான செனாப் பாலமும் அடங்கும். அஞ்சி காட் பாலம் இந்திய ரயில்வேயின் முதல் கேபிள் அடிப்படையிலான பாலமாகும்.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்
ராமேஸ்வரத்தை இணைக்கும் நாட்டின் முதல் செங்குத்து-தூக்கு பாலமும் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் பாலம் தொடர்பான பாதுகாப்புக் காரணங்களால் மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் இடையே ரயில் சேவை 2022 டிசம்பரில் நிறுத்தப்பட்டது. வந்தே பாரத் ஸ்லீப்பர் வகையை அறிமுகப்படுத்துவதில் ரயில்வே அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். வந்தே பாரத் ஸ்லீப்பரின் முதல் மாடல் பெங்களூரில் உள்ள BEML ஆல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது ஆறு மாதங்களில் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, புல்லட் ரயில் திட்டமும் விரைவுபடுத்தப்படும். 2029 ஏப்ரல் மாதத்திற்குள், 508 கிமீ நீளமுள்ள அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் பிரிவில் சுமார் 320 கிமீ நீளத்திற்கான சேவையை தொடங்க கவனம் செலுத்தப்படும்.
மேலும் படிக்க | இருக்கும் பணத்தை இரட்டிப்பாக்க வேண்டுமா? அப்போ ‘இதில்’ முதலீடு செய்யுங்கள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ