சீன நிறுவனங்களுடனான திட்ட ஒப்பந்தங்களை நிறுத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் பெய்ஜிங் தேசிய ரயில்வே ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு நிறுவனமான சிக்னல் மற்றும் கம்யூனிகேஷன் (Signal and Communication)  குழுமத்திற்கு வழங்கப்பட்ட திட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்ய இந்திய ரயில்வே வியாழக்கிழமை முடிவு செய்துள்ளது.


Garib Kalyan Rojgar Abhiyaan: பிரதமர் மோடி ஜூன் 20 ஆம் தேதி தொடங்கம்...


இந்திய ரயில்வே துறையால் நடத்தப்படும் பொதுத்துறை நிறுவனமான அர்ப்பணிப்பு சரக்கு காரிடார் கார்ப்பரேஷன் Dedicated Freight Corridor Corporation of India (DFCCIL), பெய்ஜிங் தேசிய ரயில்வே ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு நிறுவனமான சிக்னல் மற்றும் கம்யூனிகேஷன் குழுமத்திற்கு வழங்கப்பட்ட திட்ட ஒப்பந்தங்களை நிறுத்த முடிவு செய்துள்ளது.


இந்த நிலைப்பாடு இந்தியாவில் சீன எதிர்ப்பு உணர்வுகளை தூண்டியுள்ளது வெளிப்படுத்துவதோடு, எதிர்ப்பாளர்கள் மற்றும் CAIT போன்ற சில வர்த்தக அமைப்புகளின் எல்லை நிலைப்பாட்டை எதிர்த்து சீன தயாரிப்புகளை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளன.


முன்னதாக, அனைத்து சீன ஒப்பந்தங்களையும் உபகரணங்களையும் தடை செய்யுமாறு BSNL, MTNL மற்றும் பிற தனியார் நிறுவனங்களுக்கு தொலைத் தொடர்பு அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் தொழில்நுட்ப மேம்படுத்தலில் சீன உபகரணங்களைத் தவிர்க்குமாறு அவர்களை தொலைத்தொடர்பு அமைச்சகம் கேட்டுக்கொண்டது. தொலைதொடர்பு அமைச்சகத்தின் முடிவு அதன் துணை நிறுவனங்களால் 4G மேம்படுத்தல் கொள்முதல் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.


லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் ஜூன் 15-16 இரவு இராணுவம் நேருக்கு நேர் மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆபத்தான நிலையில் இருந்த மேலும் நான்கு இந்திய வீரர்கள் இப்போது நிலையாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. எனினும் சீனாவின் இந்த அத்துமீறல் தற்போது நாட்டையும், நாட்டு மக்களின் கோபத்தை தூண்டியுள்ளது.


சீன உணவுகளை மக்கள் புறக்கணிக்கவும்: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே...


முன்னதாக நேற்று ஒரு சுருக்கமான அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா அமைதியை விரும்புகிறது, ஆனால் தூண்டப்பட்டால் பொருத்தமான பதிலைக் கொடுக்கும் என்று சீனாவை எச்சரித்தார். மேலும் நிலைமை குறித்து விவாதிக்க ஜூன் 19 அன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.