இந்தியன் ரயில்வேயின் சமீபத்திய அறிக்கையிம் படி, அடிக்கடி ரயிலில் பயணம் செய்வோரது பணம் சற்று அதிகமாக செலவாகவுள்ளது. நாட்டின் பெரிய ரயில் நிலையங்களிலிருந்து செய்யப்படும் ரயில் பயணங்களின் விலை விரைவில் உயரக்கூடும். செய்தியின் படி, இந்த மாதம் அதாவது 2020 டிசம்பரிலேயே, பெரிய ரயில் நிலையங்களிலிருந்து பயணம் செய்வதற்கான பயனர் மேம்பாட்டுக் கட்டணத்திற்கு (UDF) அரசாங்கம் அங்கீகாரம் அளிக்கக்கூடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமைச்சரவை ஒப்புதல் அளித்தவுடன் இந்த ஏற்பாடு செயல்படுத்தப்படும். ரயில் பயணிகள் டிக்கெட் விலையுடன் 10 ரூபாய் முதல் 40 ரூபாய் வரையிலான பயனர் மேம்பாட்டுக் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும்.


தற்போது இந்த கட்டணம் விமான நிலையங்களில் வசூலிக்கப்படுகிறது


நாட்டில் விமான நிலையங்களை (Airport) அபிவிருத்தி செய்வதற்கு ஏற்படும் செலவுகள் விமான நிலையத்திலிருந்து பயணிக்கும் பயணிகளிடமிருந்தும் கட்டணத்துடன் பயனர் மேம்பாட்டுக் கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. அதே வழியில், ரயில்வே பயணிகளிடமிருந்து ரயிலின் கட்டணத்திற்கு கூடுதலாக பயனர் மேம்பாட்டுக் கட்டணத்தையும் வசூலிக்க இந்திய ரயில்வே தயாராகி வருகிறது.


இந்த ரயில் நிலையங்களில் கட்டணம் பொருந்தும்.


முதல் கட்டமாக, புது தில்லி (New Delhi), மும்பை, நாக்பூர், இந்தூர், சண்டிகர் போன்ற சுமார் 100 நிலையங்களில் இருந்து பயணிக்கும் பயணிகள் பயனர் மேம்பாட்டுக் கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். ரயில் நிலையங்களை நவீனமாகவும் வசதியாகவும் மாற்றுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், இந்த கட்டணங்கள் நிலைய மறுவடிவமைப்பாக சேகரிக்கப்படும்.


ALSO READ: Petrol, Diesel Prices: விலை இனி உயராது என அமைச்சர் அறிவிப்பு, இன்றைய விலை நிலவரம்


2022-23 முதல் செயலுக்கு வரலாம்


பயனர் மேம்பாட்டுக் கட்டணங்களை வசூலிக்கும் செயல்முறையை இந்தியன் ரயில்வே (Indian Railway) உடனடியாக தொடங்காது. நிலையம் முழுவதுமாக மறுவடிவமைக்கப்பட்டு, ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் கிடைப்பது தொடங்கப்பட்ட பிறகுதான் இந்த கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணங்கள் 2022-23 முதல் செயல்முறைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எவ்வளவு கட்டணம் இருக்கும்


ரயில்வே மூலம் வெவ்வேறு வகுப்புகளுக்கு வெவ்வேறு கட்டணம் விதிக்கப்படும். AC1-க்கு 35 முதல் 40 ரூபாய் வரை, 2nd AC-க்கு 25 முதல் 30 ரூபாய் வரை, 3rd AC-க்கு 20 ரூபாய் வரை செலுத்த வேண்டியிருக்கக்கூடும்.  பொது டிக்கெட் (General Tickets) வைத்திருக்கும் பயணிகள் இந்த கட்டணங்களை செலுத்த வேண்டியதில்லை.


ALSO READ: Christmas Special: Indigo வழங்கும் இந்த yummy offer பற்றி உங்களுக்குத் தெரியுமா? Booking started!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR