2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75 வந்தே பாரதே ரயில்களையும், அடுத்த 3 ஆண்டுகளில் 400 ரயில்களையும் அறிமுகம் செய்ய வேண்டும் என்பது மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரயில்வேயில் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் சென்னை ICF தொழிற்சாலையில் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் கூடுதலாக, கபுர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலை, ரேபரேலி ரயில் பெட்டி தொழிற்சாலை ஆகியவற்றிலும் வந்தே பாரத் ரயிகள் தயாரிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற அரை அதிவேக ரயில் மூலம் நாட்டின் 75 நகரங்களை இணைக்கப் போவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதுவரை நாட்டில் ஐந்து வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டுள்ளது. இப்போது புதிய வழித்தடத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க ரயில்வே தயாராகி வருகிறது. இது நாட்டின் ஆறாவது வந்தே பாரத் ரயிலாகும். இது செகந்திராபாத் (தெலுங்கானா) முதல் விஜயவாடா (ஆந்திரப் பிரதேசம்) ரயில் நிலையம் வரை இயக்கப்படும்.


விரைவில் அறிவிக்கப்பட உள்ள தேதி


இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். செகந்திராபாத் மற்றும் விஜயவாடா இடையே இயக்கப்படும் வந்தே பாரத் புத்தாண்டில் தொடங்கப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், அதன் தேதி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தண்டவாளத்தை மேம்படுத்தும் பணி முடிந்ததும், தேதி அறிவிக்கப்படும் ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


மேலும் படிக்க | கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம்


வழித்தடத்தில் ரயில்வே அமைச்சர் காட்டிய 'கிரீன் சிக்னல்' 


செகந்திராபாத்தில் இருந்து விஜயவாடா செல்லும் வந்தே பாரத் காசிப்பேட்டை சந்திப்பு வழியாக இலக்கை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் தொடங்கினால் தென்னிந்தியாவில் மற்றொரு வழித்தடத்தில் வந்தே பாரத் தொடங்கும். தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் நவம்பர் மாதம் சென்னையில் இருந்து மைசூருக்கு இயக்கப்பட்டது. இந்நிலையில் இந்த புதிய வழித்தடத்திற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கிரீன் சிக்னல் காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


 செகந்திராபாத் - விஜயவாடா வழித்தடம்


செகந்திராபாத் - விஜயவாடா ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ஜி கிருஷ்ணன் ரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். ரெட்டி தற்போது செகந்திராபாத் மக்களவை எம்.பி.யாக உள்ளார். செகந்திராபாத் - விஜயவாடா வழித்தடத்தை விசாகப்பட்டினம் வரை நீட்டிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாகவும், 2023 பிப்ரவரிக்குள் அது முடிக்கப்படலாம் என்றும் ஆதாரங்கள் கூறுகின்றன.


மேலும் படிக்க | உயர் சாதியினருக்கும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு சரியே! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ