சீன கடலில் சிக்கி தவிக்கும் இந்திய மாலுமிகள் ஜனவரி 14ம் தேதி திரும்புவார்கள்
சீன கடலில் பல மாதங்களாக சிக்கி தவிக்கும் இந்திய மாலுமிகள் ஜனவரி 14ம் தேதி திரும்புவார்கள் என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக, பல மாதங்களாக 39 இந்திய மாலுமிகள் சிக்கி தவித்து வருகின்றனர்.
இந்தியாவின் சரக்கு கப்பலான எம்வி ஜக் ஆனந்த் (MV Jag Anand), சீனாவின் ஜிங்டாங் துறைமுகம் அருகே நங்கூரமிட்டு நிற்கிறது. ஜூன் மாதம் 13ம் தேதி முதல் சிக்கியுள்ள இந்த கப்பலில் 23 மாலுமிகள் உள்ளனர். மற்றொரு கப்பலான எம்வி அன்ஸ்டாசியா (MV Anastasia), கொயபோடியன் (Caofeidian) துறைமுகத்தில் சிக்கித் தவிக்கிறது. 16 மாலுமிகள் இதில் உள்ளனர்.
பல மாதங்களாக, இந்த மாலுமிகளை விடுவிக்க வைக்கப்பட்ட கோரிக்கைகளை சீன அரசு தொடர்ந்து நிராகரித்து வந்தது.
இந்நிலையில், கிரேட் ஈஸ்டர்ன் ஷிப்பிங் கம்பெனி என்ற நிறுவனம் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, இந்திய மாலுமிகள், பல மாதங்கள் கழித்து திரும்பி வர உள்ளனர்.
சீன கடலில் பல மாதங்களாக சிக்கி தவிக்கும் இந்திய மாலுமிகள் ஜனவரி 14ம் தேதி திரும்புவார்கள் என மத்திய நீர்வழி போக்குவர்த்து துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா (Mansukh Mandaviya) உறுதி படுத்தியுள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் செய்தி வெளியிட்ட அவர் கிரேட் ஈஸ்டர்ன் ஷிப்பிங் கம்பெனிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்
ALSO READ | நாடு முழுவதும் ஜனவரி 16முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கம்: மத்திய அரசு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR