இந்திய ஸ்கை டைவர் (skydiver) ஷீடால் மகாஜன் என்ற பெண் பிரதமர் நரேந்திர மோடிக்கு சுமார் 13,000 அடி உயரத்தில் இருந்து குதித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 68 வது பிறந்த தனத்தை வாரணாசியில் கொண்டாடினார். இதையடுத்து, பிரதமர் மோடிக்கு பல்வேறு தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இதை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள பாஜக ஆதரவாளர்கள் மோடியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்கள்.


இதை தொடர்ந்து, நேற்று இந்திய ஸ்கை டைவர் (skydiver) ஷீடால் மகாஜன் என்ற பெண்மணி 13,000 அடி உயரத்தில் பரந்த விமானத்திலிருந்து கீழே குதித்து பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  


இவர் US-ன் சிகாகோவில் இதற்கான சிறப்பு பயிற்சியை பெற்ற இவர் வெற்றி அடைந்துள்ளார். மேலும், இவர் பத்ம ஸ்ரீ விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்களை இவர் தனது சமூக வலைதள பக்கமான முகநூளில் பதிவிட்டுள்ளார். அதில் வீடியோ மூலமும் அவர் பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவின் புகழ்பெற்ற பிரதம மந்திரி திரு நரேந்திர மோடிஜி 13000 அடி நீள வானில் இருந்து தனது 68 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்... சக இந்திய ஸ்கை டைவர் சுதிப் கொடவாத்தி இந்த வீடியோவை எடுத்துள்ளார் என்று அந்த பதிவில் இவர் குறிப்பிட்டுள்ளார்.