இன்று உங்கள் போனுக்கு ஒரு `எச்சரிக்கை` மெசேஜ் வந்துச்சா... அது என்ன தெரியுமா?
Emergency Alert Message: இந்தியா முழுவதும் உள்ள பல ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இன்று மதியம் மத்திய அரசு தரப்பில் ஒரு எச்சரிக்கை செய்தி வந்துள்ளது. அதுகுறித்த விவரங்களை இதில் முழுமையாக காணலாம்.
Emergency Alert Message: நாடு முழுவதும் உள்ள பல மொபைல் ஃபோன் பயனர்களுக்கு, இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் செல் ஒலிபரப்பு அமைப்பில் இருந்து திடீர் 'மாதிரி சோதனைச் செய்தி' இன்று அனுப்பப்பட்டுள்ளது. இதனால், பலரும் வியப்படைந்துள்ளனர்.
மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையால் அனுப்பப்பட்ட அந்த செய்தியில், அவசர காலங்களில் மேம்பட்ட பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த மெசேஜ் இருப்பதாக அதில் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,"இது மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் செல் ஒலிபரப்பு அமைப்பு மூலம் அனுப்பப்பட்ட மாதிரி சோதனைச் செய்தி ஆகும். உங்கள் பக்கம் இருந்து எந்த எதிர்வினையும் தேவையில்லை என்பதால் இந்த செய்தியை புறக்கணிக்கவும். இந்த செய்தி பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் பான்-இந்தியா எமர்ஜென்சி அலர்ட் சிஸ்டம். இது பொது பாதுகாப்பை மேம்படுத்துவதையும், அவசர காலங்களில் சரியான நேரத்தில் விழிப்பூட்டல்களை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று அந்த மெசேஜில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது சரியாக இன்று பிற்பகல் 1.30 மணியளவில் பல ஸ்மார்ட்போன் பயனர்கள் இந்த பிளாஷ் செய்தியை பெற்றுள்ளனர்.
மொபைல் ஆபரேட்டர்கள் மற்றும் செல் ஒளிபரப்பு அமைப்புகளின் அவசர எச்சரிக்கை ஒளிபரப்பு திறன்களின் செயல்திறன் மற்றும் அதனை மதிப்பிடும் முயற்சியில், நாடு முழுவதும் வெவ்வேறு பகுதிகளில் அவ்வப்போது இதே போன்ற சோதனைகள் நடத்தப்படும் என தொலைத்தொடர்பு துறையின் செல் ஒளிபரப்பு அமைப்பின் படி, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள தொலைபேசி பயனர்கள் ஜூலை 20ஆம் தேதி அன்றும் இதேபோன்ற எச்சரிக்கை பரிசோதனை மெசேஜை பெற்றனர்.
செல் ஒளிபரப்பு எச்சரிக்கை அமைப்பு என்பது ஒரு தொழில்நுட்பமாகும். இது ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் உள்ள அனைத்து மொபைல் சாதனங்களுக்கும் பேரிடர் மேலாண்மைக்கான முக்கியமான மற்றும் நேர-உணர்திறன் செய்திகளை பெறுபவர்கள் குடியிருப்பாளர்கள் அல்லது பார்வையாளர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் அனுப்ப அனுமதிக்கிறது என தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம், சுனாமி மற்றும் திடீர் வெள்ளம் போன்ற பேரிடர்களுக்கு சிறப்பாக தயாராக இருக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து அரசு செயல்பட்டு வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ