ஹாட்ரிக் சாதனையை படைத்த இந்திய பங்குச்சந்தை!
தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 82 புள்ளிகள் உயர்ந்து 11,231.15 புள்ளிகளில் வர்த்தகமானது!
தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 82 புள்ளிகள் உயர்ந்து 11,231.15 புள்ளிகளில் வர்த்தகமானது!
காலை நேரத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 324 புள்ளிகள் ஏற்றம் கண்டு 37,197.74 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 82 புள்ளிகள் உயர்ந்து 11,231.15 புள்ளிகளில் வர்த்தகமானது.
இந்திய பங்குச்சந்தைகள் இந்தளவு உச்சம் பெற்றிருப்பது இதுவே முதன் முறையாகும். 1,288 நிறுவன பங்குகள் மதிப்பு ஏற்றத்தையும், 568 பங்குகள் சரிவையும் சந்தித்துள்ளன. மேலும், 98 பங்குகள் எந்தவித மாற்றமும் இன்றி வர்த்தகமாயின. ITC, SBI, Hindalco உள்ளிட்ட பங்குகள் லாபத்தையும், Yes Bank, Adani Ports உள்ளிட்ட பங்குகள் நஷ்டத்தையும் சந்தித்தன.