லடாக்கில் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக பரவிவரும் தவறான தகவல்களை தீர்க்கும் பொருட்டு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், ராகுல் காந்தியை எதிர்த்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி வியாழக்கிழமை காலை ஒரு தேசிய செய்தித்தாளின் வீடியோவை ட்வீட் செய்தார். இந்த வீடியோவில் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுப்ட்ட இந்திய வீரர்கள் ஆயுதம் இல்லை எனவும், ஆயுதம் இல்லா இந்திய வீரர்களை சீன படைகள் தாக்கியதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வீடியோவை மேற்கொள் காட்டிய ராகுல் காந்தி, கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் சீன துருப்புக்களுடன் நேருக்கு நேர் சந்தித்தபோது இந்திய வீரர்கள் ஏன் "ஆயுதம் இன்றி" இருந்தனர் என்று கேள்வி எழுப்பினார்.


டெல்லி சுகாதார துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதியானது...


இதுதொடர்பான ட்விட்டர் பதிவில் அவர் "சீனாவிற்கு நமது ஆயுதமற்ற வீரர்களைக் கொல்ல எவ்வளவு தைரியம்? நமது வீரர்களை ஆயுதம் இன்றி ஏன் அனுப்பினர்?" என குறிப்பிட்டிருந்தார். ராகுல் காந்தியின் இந்த பதிவு, இணையத்தில் பெரும் விவாதத்தை தூண்டியது.



இந்நிலையில் ராகுல் காந்தியின் கேள்வி தேவையற்றது எனவும், தவறான தகவலை அவர் பகிர்ந்துள்ளார் எனவும் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கள் குறிப்பிட்டுள்ளார். ஒரு அசாதாரண எதிர்வினையில், பொதுவாக சமூக ஊடகங்களில் அரசியல் சண்டையிலிருந்து விலகி இருக்கும் ஜெய்சங்கர், இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தியை ட்விட்டரில் கண்டித்தார்.


ராகுல்காந்தியின் ட்விட்டர் பதிவுக்கு பதில் அளித்த ஜெய்சங்கர், "எல்லைக் கடமையில் உள்ள அனைத்து வீரர்களும் எப்போதும் ஆயுதங்களை ஏந்தி செல்கின்றனர்." என குறிப்பிட்டுள்ளார்.


'பைத்தியம் மீண்டும் அதே காரியத்தைச் செய்கிறது' மத்திய அரசை தாக்கும் ராகுல்!...


எவ்வாறாயினும், ட்விட்டரில் பல வர்ணனையாளர்கள் ஜெய்சங்கரிடம் ஏன் வெளியுறவு மந்திரி பதில் அளிக்கின்றார், பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் எங்கே சென்றுவிட்டார் என கேள்வி எழுப்பினர். மேலும் இராணுவ நெறிமுறை மற்றும் நிலைப்பாடு தொடர்பான விஷயங்களில் தாங்கள் ஏன் அறிக்கையை வெளியிடவேண்டும் என்றும் கேள்வி எழுப்பினர்.