இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கடந்த சில நாட்களாக கடுமையான பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையில், பல முக்கிய இந்திய செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களுக்கான அணுகல் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீன செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களுக்கான அணுகல் இந்தியாவில் தடையின்றி உள்ள அதே நேரத்தில், வி.பி.என் எனப்படும் வர்சுவல் ப்ரைவேட் நெட்வர்க்கைக் கொண்டுள்ள இந்திய ஊடக இணையதளங்களை மட்டுமே சீன மக்கள் அணுக முடியும். தற்போதைக்கு ஐ.பி. டிவி மூலம், இந்திய தொலைக்காட்சி சேனல்களைக் காணலாம். கடந்த இரண்டு நாட்களாக, சீனாவில், டெஸ்க்டாப் கணிணிகளிலும் ஐ-ஃபோன்களிலும் எக்ஸ்பிரஸ் விபிஎன் பணிபுரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


VPN என்பது, ஒரு தனிப்பட்ட இணைப்பை உருவாக்கி, பயனர்களுக்கு ஆன்லைன் தனியுரிமையை அளிக்கும் ஒரு மிகச்சிறந்த சிறப்பம்சமாகும். ஆனால் சீனா (China), அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட ஃபயர்வால் மூலம், VPN-களையும் தடுத்து நிறுத்துவதில் வெற்றி கண்டுள்ளது.


ஜூன் 15 அன்று கல்வான் (Galwan) பள்ளத்தாக்குப் பகுதியில் நடந்த மோதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கும் (India) சீனாவிற்கும் இடையில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்த மோதலில் இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் கொல்லப்பட்டனர்.


இதைத் தொடர்ந்து இரு நாடுகளிலும், இது தொடர்பான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. கொரோனா (Corona) பெருந்தொற்றை உலகில் பரப்பி, உலக நாடுகளின் கோவத்திற்கு ஆளாகியுள்ள சீனா, தற்போது அதன் பின்விளைவுகளை சந்தித்து வருகிறது. பல நாடுகள் தங்கள் நிறுவனங்களை சீனாவிலிருந்து அகற்றி இந்தியாவில் அமைக்க திட்டமிட்டு வருகின்றன. இது, இந்தியா மீதான சீனாவின் கோவத்தை இன்னும் அதிகரித்துள்ளது.


ALSO READ:     சீனாவுக்கு அடிக்கு மேல் அடி! ஒரு புறம் செயலிகளின் செயலிழப்பு, மறுபுறம் அமெரிக்கா அளித்த அதிரடி அறிக்கை!!


டிக்டாக் (Tiktok) உட்பட 59 சீன பயன்பாடுகளுக்கு இந்திய அரசாங்கம் தற்போது தடை விதித்துள்ளது. எனினும், இந்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு முன்னரே சீனா இந்திய ஊட்கங்களை தனது நாட்டில் தடை செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகளிலேயே சீனாவிடம் மிக வலுவான ஆன்லைன் தணிக்கை முறை உள்ளது. ’கிரேட் ஃபயர்வால்’ என்ற அதிநவீன ஆன்லைன் தணிக்கை முறையைக் கொண்டுள்ள சீனா, உள்நாட்டு இணைய போக்குவரத்தையும் தரவுகளையும் கட்டுப்படுத்துவதோடு, கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான கருத்துகளை தெரிவிகிக்கும் இணையதளங்களை கண்காணித்து அவற்றை பிளாக், அதாவது தடை செய்து விடுகிறது.


கடந்த சில ஆண்டுகளில் மட்டும், சீனா சுமார் 10,000 இணையதளங்களை தடை செய்துள்ளதாக ’சௌத் சைனா மார்ணிங் போஸ்டின்’ ஒரு கட்டுரை தெரிவிக்கிறது.


தங்கள் நாட்டிற்கு எதிராக உள்நாட்டிலோ அல்லது நாட்டின் வெளியிலிருந்தோ எந்த கருத்துக்கள் வெளி வந்தாலும், அதன் மூலத்தை முடக்கி விட வேண்டும் என்பதை சீன அரசாங்கம் ஒரு கொள்கையாகவே வைத்துள்ளது.


ALSO READ:   ஹோட்டல் தாஜை குண்டு வைத்து தகர்ப்பதற்கான மிரட்டல், பாகிஸ்தானிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு