ஹோட்டல் தாஜை குண்டு வைத்து தகர்ப்பதற்கான மிரட்டல், பாகிஸ்தானிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு

தொலைபேசி அழைப்பு மூலம் வந்த மிரட்டலுக்குப் பிறகு மும்பையின் தாஜ் ஹோட்டலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 30, 2020, 01:00 PM IST
  • மும்பையிலுள்ள தாஜ் ஹோட்டலுக்கு பயங்கரவாத தாக்குதலுக்கான மிரட்டல்.
  • பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.
  • 2008 ஆம் ஆண்டு நடந்த தாக்குதலின் ரணங்கள் மீண்டும் உயிர் பெற்றன.
ஹோட்டல் தாஜை குண்டு வைத்து தகர்ப்பதற்கான மிரட்டல், பாகிஸ்தானிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பு title=

மும்பையில் உள்ள புகழ்பெற்ற தாஜ் ஹோட்டலில் (Hotel Taj) பயங்கரவாத தாக்குதல் நட்ததப்படக்கூடும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசி மூலம் இந்த மிரட்டல் வந்ததாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து இந்த ஹோட்டலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு வரும் அனைத்து விருந்தினர்களும் கண்காணிக்கப்படுகிறார்கள். ஹோட்டலைச் சுற்றியுள்ள தெற்கு மும்பை (Mumbai) பகுதிகளில், காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இது தவிர மும்பையின் வேறு சில முக்கியப் பகுதிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி, பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகள் மும்பையின் பல இடங்களில் தாக்குதல்களை (Mumbai Terror attacks) நடத்தினர். அப்போது தாஜ் ஹோட்டலும் தாக்கப்பட்டது. அந்த தாக்குதல் இன்னும் அனைவரது மனங்களிலும் அகலாத வடுவாய் உள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 166-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 300-க்கும் மெற்பட்டோர் காயமடைந்தனர். மும்பையில் நடந்த இந்தத் தாக்குதல், இந்தியா பாகிஸ்தான் (Pakistan) இடையில் போருக்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டு வந்தது.

ALSO READ:  சீனாவுக்கு அடிக்கு மேல் அடி! ஒரு புறம் செயலிகளின் செயலிழப்பு, மறுபுறம் அமெரிக்கா அளித்த அதிரடி அறிக்கை!!

பாகிஸ்தானிலிருந்து கடல் வழியே வந்த பயங்கரவாதிகள் மும்பையின் பல பகுதிகளில் தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவித்தனர். தாஜ் ஹோட்டலில் நடந்த தாக்குதலில் பல வெளிநாட்டினர் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.   

மும்பை தாக்குதல்களில் பயங்கரவாதி அஜ்மல் கசாப் (Ajmal Kasab) உயிருடன் பிடிபட்டான். அதன் பிறகு ஐந்து உளவுத்துறை நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில், பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னால், பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டுக் கொண்டிருந்த பயங்கரவாத அமைப்புகளின் பங்குள்ளது என்பது தெரிய வந்தது. 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி பயங்கரவாதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான்.  

தற்போது தாஜ் ஹோட்டலுக்கு தொலைபேசி அழைப்பு மூலம் வந்துள்ள இந்த பயங்கரவாத தாக்குதலுக்கான மிரட்டல், 2008 ஆம் ஆண்டு நடந்த தாக்குதல்களின் காயங்களை நினைவுபடுத்தியுள்ளது.

ALSO READ: ஆட்டம் காணும் நேபாள பிரதமரின் பதவி, ஆட்சியை கவிழ்க்க முயல்வதாக இந்தியா மீது குற்றச்சாட்டு

Trending News