கொரானா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஈரானிலிருந்து மீட்டு அழைத்துவரப்பட்ட 234 இந்தியர்கள், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் தனித்த முகாம்களில் உள்ளனர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஈரானில் 12,729 பேர் கொரானா பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது. அங்கு சிக்கி தவித்து வரும் இந்தியர்களை படிப்படியாக மீட்டு வரும் இந்தியா, ஏற்கனவே 2 கட்டங்களாக 102 பேரை மீட்டது. அந்தவகையில் 3 ஆம் கட்டமாக 103 புனித பயணிகள், 131 மாணவர்கள் என மொத்தம் 234 பேர் ஈரானில் இருந்து, விமானம் மூலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் அழைத்து வரப்பட்டனர். அங்கு ராணுவத்துக்கு சொந்தமான தனித்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டு கண்காணிப்படவுள்ளனர். 


மேற்காசிய நாடான ஈரானில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 131 மாணவர்கள், 103 யாத்ரீகர்கள் என 234 பேரையும் அழைத்து வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக மஹான் விமானம் மூலம் இன்று மும்பை வந்தடைந்தனர். இது குறித்து வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், ஈரானில் சிக்கிய 234 இந்தியர்களும் மும்பை வந்தடைந்தனர். இந்தியர்களை மீட்க வசதி செய்து கொடுத்த ஈரானிய அதிகாரிகளுக்கு நன்றி, என கூறினார்.


இந்நிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில் உள்ள மிலன் மல்பென்சா விமான நிலையத்தில் 55 தமிழக மாணவர்கள் உட்பட 218 பேர், கொரோனா குறித்த தகுதி சான்றிதழ் இல்லாத காரணத்தினால், இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். அவர்களை மீட்டு வருவதற்காக, 'ஏர் - இந்தியா' நிறுவனத்தின் சிறப்பு விமானம், நேற்று இத்தாலி புறப்பட்டு சென்றது. மேலும், 218 பேரையும் மீட்டு ஏர் இந்தியா விமானம் இந்தியா புறப்பட்டுள்ளது.