அதிர்ச்சி!! அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் இந்தியாவைச் சேர்ந்த மென்பொறியாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரப்பரை ஏற்படுத்தியுள்ளது.
ஐதாராபாத்தைச்சேர்ந்த மென்பொறியாளரான ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். இவர் கன்சாஸ் பகுதியில் உள்ள மதுபான விடுதி ஒன்றிற்கு சென்றிருந்த போது அங்கே வந்த 51 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென ஸ்ரீனிவாசை துப்பாக்கியால் சுட்டார். பின்னர் இந்தியர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்று கத்தியதாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திலேயே ஸ்ரீனிவாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். அலோக் என்ற மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். துப்பாக்கியால் சுட்ட நபரின் பெயர் ஆடம் புரிண்டன் என்றும், அவர் கடற்படையில் பணிபுரிபவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இச்சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட ஸ்ரீனிவாஸ் குடும்பத்துக்கு இதயப்பூர்வமான தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.