இந்தியாவின் மிஷன் சக்தி சோதனையின் காரணமாக விண்ணில் சிதறிய செயற்கை கோளின் சிதைகூளங்கள் எரிந்து சாம்பலாகிவிடும் என்பதால் ஆபத்தில்லை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விண்வெளியில் வலம் வரும் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாகவும், செயல்பாட்டில் இருந்த ஒரு செயற்கைக்கோள் அவ்வாறு தாக்கி அழிக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி கடந்த 27 ஆம் தேதி நாட்டு மக்களிடையே அறிவித்திருந்தார்.


இதனிடையே, இந்தியாவின் ஏசாட் ஏவுகணை சோதனையை அமெரிக்க விமானப் படை உளவு பார்த்ததாக, வான் வெளியில் ராணுவ விமான செயல்பாடுகளைக் கண்காணிக்கும் ஏர்கிராஃப்ட் ஸ்பாட் என்ற அமைப்பு தகவல் வெளியிட்டது. இதை தொடர்ந்து, செயற்கைக் கோளை தாக்கி அழித்த, இந்தியாவின் ASAT சோதனையால் விண்ணில் சிதைகூளங்களாக 400 துண்டுகள் மிதப்பதாகவும், அது சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கும் அதில் உள்ள விண்வெளி வீரர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் நாசா கூறியிருந்தது. 


இந்நிலையில், இந்தியாவின் மிஷன் சக்தி சோதனையின் காரணமாக விண்ணில் சிதறிய செயற்கை கோளின் சிதைகூளங்கள் எரிந்து சாம்பலாகிவிடும் என்பதால் ஆபத்தில்லை என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் உறுதிப்படுத்தியுள்ளது.


விண்வெளியில் செயற்கைகோளை தாக்கி அழிக்கும் ஏசாட் சோதனையை கடந்த மாதம் இந்தியா நடத்தியது. ஆனால் சிதை கூளங்கள் வளிமண்டலத்திற்குள் கீழிறங்கி எரிந்து சாம்பலாகி விடும் என்பதால் ஆபத்து ஏற்படாது என இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், ஏசாட் சோதனையினால் ஏற்பட்ட செயற்கை கோளின் சிதை கூளங்கள் வளிமண்டலத்திற்குள் கீழிறங்கி எரிந்து சாம்பலாகிவிடும் என அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.