சர்வதேச கோர்ட்டு நீதிபதியாக இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி தேர்வு!!
சர்வதேச கோர்ட்டு நீதிபதியாக மீண்டும் இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கோர்ட்டு நீதிபதியாக மீண்டும் இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகரில் சர்வதேச கோர்ட்டு செயல்படுகிறது. 15 நீதிபதி பணியிடங்களை கொண்ட இந்த கோர்ட்டில் கடைசி ஒரு இடத்துக்கு இந்தியர் தல்வீர் பண்டாரியும் (70), இங்கிலாந்தை சேர்ந்த கிரீன் உட்டும் (62) மோதுகின்றனர்.
இந்த தேர்தல்களில் 193 இடங்களை கொண்ட ஐ.நா. பொதுச்சபையில் தல்வீர் பண்டாரிக்கு மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் அமோக ஆதரவு கிடைத்தது. ஆனால் ஐ.நா. பாதுகாப்பு சபையில் கிரீன் உட்டுக்கு மெஜாரிட்டி கிடைத்தது. அங்கு அவருக்கு 9 ஓட்டுகள் கிடைத்தன.
இந்நிலையில், ஐ.நா. பொதுச்சபையும், பாதுகாப்பு சபையும் நேற்று கூடியது. நீதிபதிக்கான தேர்தல் நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த கிரீன் உட் நீதிபதி பதவிக்கான போட்டியில் இருந்து தான் விலகிக் கொள்வதாக அறிவித்தார்.
இதையடுத்து, சர்வதேச கோர்ட்டு நீதிபதியாக இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரியே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.