கடந்த 16-ம் தேதி சுற்றிலும் கண்ணாடி பொறுத்தப்பட்டுள்ள ’Vistadome Coaches’ என்னும் ரயில் பெட்டியை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் முதல்முறையாக இது போன்ற கண்ணாடி ரயில் பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி ரயில் பெட்டி, விசாகப்பட்டினம்-கிரண்டூர் பயணிகள் ரயிலில் இணைக்கப்பட்டுள்ளது. 


இந்த ரயில் பெட்டியில் கண்ணாடி மேற்கூரை, குளிர்சாதன வசதி, 360 டிகிரி அளவுக்கு சுற்றும் 40 இருக்கைகள், ஜி.பி.எஸ், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. விசாகப்பட்டினம்-கிரண்டூர் ரயில் பாதையில், அரக்கு மலைப்பகுதி அமைந்துள்ளது. இந்த கண்ணாடி பெட்டியில் பயணிப்போர், அரக்கு மலைப்பகுதியின் அழகை ரயிலில் அமர்ந்தவாரே கண்டு ரசிக்க முடியும். இந்த பெட்டியை தயாரிக்க சுமார் 3.38 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.