இரட்டை இலக்க வளர்ச்சி விகிதம்: இந்தியா மீது IMF காட்டியுள்ள அபார நம்பிக்கை
இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2021 ஆம் ஆண்டில் 12.5% ஆக இருக்கும் என்றும் சர்வதெச நாணய நிதியம் கணித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி தன்னுடைய அறிக்கையை அளித்த சர்வதேச நாணய நிதியம், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 12.5% ஆக இருக்கும் என கணித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் தொற்றுநோய்களுக்கு மத்தியில் சாதகமான வளர்ச்சி விகிதத்தைக் கொண்ட, உலகளவில் ஒரே பெரிய பொருளாதாரமாக இருந்த சீனாவை விட இந்தியாவுக்கான இந்த கணிப்பு வலுவானது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா (Coronavirus) தாக்கத்தால் அனைத்து நாடுகளும் மீள முடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கும் ஒரு நேரத்தில், மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை இரட்டை இலக்கத்தில் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது மிகப்பெரிய விஷயமாகும். அரசாங்கம் எடுத்துள்ள கொரோனா மீட்பு நடவடிக்கைகளும், இந்தியா மீது உலக அளவில் உள்ள ஆக்கப்பூர்வமான எதிர்பார்ப்புகளும் இதற்கு மிகப் பெரிய காரணங்களாகும்.
உலகளாவிய நிதி நிறுவனம் தனது வருடாந்திர உலக பொருளாதார கணிப்பில், 2022 ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 6.9% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கணித்துள்ளது. உலக வங்கியுடனான சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திர கூட்டத்திற்கு முன்னதாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் (Indian Economy) 8% ஆக சுருங்கிவிட்டது என்று சர்வதேச நாணய நிதியம் கூறியது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2021 ஆம் ஆண்டில் 12.5% ஆக இருக்கும் என்றும் சர்வதெச நாணய நிதியம் கணித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில், 2.3% நேர்மறையான வளர்ச்சி விகிதத்தைக் கொண்ட ஒரே பொருளாதாரமாக சீனா இருந்தது. எனினும், சீனாவின் வளர்ச்சி விகிதம் 2021 இல் 8.6 சதவீதமாகவும் 2022 இல் 5.6 சதவீதமாகவும் மட்டுமே இருக்கும் என சரவ்தேச நாணய நிதியம் கணித்துள்ளது.
2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்திற்கு வலுவான மீட்பு:
2020 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் 3.3 சதவிகிதம் சுருங்கியது. அறிக்கையின்படி, கடந்த ஆண்டு 3.3 சதவீதமாக சுருங்கிய பின்னர், உலகப் பொருளாதாரம் 2021 ஆம் ஆண்டில் 6 சதவீதமாகவும், 2022 ஆம் ஆண்டில் 4.4 சதவீதமாகவும் வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: மீண்டும் இரவு நேர ஊரடங்கு: அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் Metro train, bus சேவைகள்
2020 ஆம் ஆண்டிற்கான சுருக்கம் அக்டோபர் 2020 உலக பொருளாதார அவுட்லுக்கில் திட்டமிடப்பட்டதை விட 1.1% புள்ளிகள் குறைவானதாக உள்ளது.
லாக்டவுனிற்குப் (Lockdown) பிறகு பெரும்பாலான பிராந்தியங்கள் தங்களது தொழில்துறை மற்றும் பிற வழிமுறைகளை வெகுவாக மாற்றிக்கொண்டதோடு, அதிக தளர்வுகளையும் ஏற்படுத்திக் கொண்டன. இவை அனைத்தும் ஆண்டின் இரண்டாம் பாதியில் எதிர்பார்த்ததை விட அதிகமான வளர்ச்சியாக பிரதிபலிக்கின்றன.
இதற்கிடையில் பொருளாதாரம் சார்ந்த கொரோனா மீட்பு நடவடிக்கைகளில் நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. தடுப்பூசிகள், சுகாதார பராமரிப்பு செலவுகள் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து, சுகாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு முன்னேற நாடுகளின் முக்கியத்துவம் அளித்து வருகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நிதி ஆதரவு அளிப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
காலநிலை மாற்றத்தைத் தணிக்க உதவுவதற்கும், அதிகரித்துவரும் சமத்துவமின்மையைத் தடுக்க சமூக உதவிகளை வலுப்படுத்துவதற்கும், உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்காக டிஜிட்டல் உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதற்கும் நாடுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
ALSO READ: SBI வாடிக்கையாளர்களுக்கு பெரிய அறிவிப்பு! இந்த 8 சேவைகளுக்கு சிறப்பு ஏற்பாடு!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR