சமுத்திரையான்... 2025ம் ஆண்டு ஆழ்கடலுக்குள் மனிதர்கள் செல்வார்கள்: கிரண் ரிஜ்ஜு
நிலவுக்கான சந்திரன் திட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஆழ்கடலுக்குள் மனிதர்களை அனுப்பும் சமுத்திரையான் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற, மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது.
விண்வெளி, நட்சத்திர கூட்டங்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆழ்கடல் ஆராய்ச்சியும் மிகவும் முக்கிய. விண்வெளி ஆராய்ச்சியை விட அதிகமான ரகசியங்கள் மற்றும் செல்வ வளங்களை நம் ஆழ்கடலில் காண காத்திருக்கின்றன என்றால் மிகையில்லை. இந்நிலையில், நிலவுக்கான சந்திரயான் திட்டம் (Chandrayaan Mission) வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஆழ்கடலுக்குள் மனிதர்களை அனுப்பும் சமுத்திரயான் திட்டத்தை (Samudrayaan mission) விரைவில் நிறைவேற்ற, மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது. வரும் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள், இந்தியா ஆழ்கடலில் ஆய்வு செய்ய ஆறு கிலோமீட்டர் ஆழத்திற்கு விஞ்ஞானிகளை அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக, புவி அறிவியல் துறை அமைச்சர் திறன் ரிஜு தெரிவித்துள்ளார். ஆயிரம் என்ற நீர்மூழ்கி கப்பலின் உதவியுடன், மனிதர்கள் கடலுக்கு அடியில் 6000 மீட்டர் ஆழத்திற்கு செல்ல முடியும் என்று, நீதி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் மேற்கொண்ட சமுத்ரயான் சோதனை
சமுத்திரயான் என்பது மனிதர்களைக் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். இது விஞ்ஞானிகள் ஆராயப்படாத ஆழ்கடல் பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்ய உதவும். தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) இந்தியாவின் முதல் ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல் பயணமான சமுத்ராயன் என்ற முக்கிய சோதனையை நிறைவு செய்துள்ளது என்று புவி அறிவியல் அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. சமுத்திரயான் திட்டத்தின் கீழ், தாதுக்கள், நுண் உலோகங்கள் போன்ற ஆழ்கடல் வளங்களை ஆய்வு செய்வதற்காக இந்திய, மூன்று விஞ்ஞானிகளை 6,000 மீட்டர் ஆழத்திற்கு ‘மத்ஸ்யா 6000’ என்ற நீர்மூழ்கிக் கப்பலை அனுப்ப உள்ளது.
வெளிச்சம் கூட எட்டாத கடலுக்குள் செல்ல உள்ள விஞ்ஞானிகள்
சமுத்திரயான் திட்டத்திற்கான அடுத்த கட்ட சோதனைகள், இந்த ஆண்டு இறுதிக்குள் மேற்கொள்ளப்படும் என்றும், வெளிச்சம் கூட எட்டாத கடலுக்குள் ஆறு கிலோமீட்டர் ஆலம் வரை மனிதர்கள் செல்வார்கள் என்றும் கூறினார். கடலுக்கு அடியில் என்ன இருக்கிறது என்பது குறித்து விரிவாக ஆய்வு நடத்த, சமுத்திரயான் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சமுத்திரயான் திட்டம்
சமுத்திரயான் அல்லது ஆழ்கடல் பணித்திட்டம், கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மூன்று பேர் கொண்ட குழு பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட மதஸ்யா 6000 என்ற நீர்மூழ்கி கப்பலின் உதவியுடன், 6000 மீட்டர் ஆழத்திற்கு பயணம் செய்ய, இந்தத் திட்டத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீர்மூழ்கி கப்பலில் பொருத்தப்படும் அறிவியல் சென்சார்கள் மற்றும் கருவிகள், 12 மணி நேரம் செயல்படும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும், அவசர காலத்தில் 96 மணி நேரம் வரை இதனை செயல்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது.
ஆழ்கடல் ஆராய்ச்சி பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள நாடுகள்
இதுவரை ஆழ்கடல் ஆராய்ச்சி பணிகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள நாடுகளில், அமெரிக்கா, ரஷ்யா,, சீனா, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் அடங்கும். இந்த வரிசையில் இந்தியாவும், ஆழ்கடல் பணிகளுக்கான நிமுதத்துவம் பெற்றுள்ள நாடுகளின் வரிசையில் இணையும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ