கர்நாடகா மாநிலம் ஹுப்பல்லி விமான நிலையத்தில் விமான சேவைகளை துவங்க IndiGo ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வழித்தடத்தில் கொரோனா முழு அடைப்பிற்கு பின் இடைநிறுத்தப்பட்ட விமான சேவைகள், போதுமான இடங்களுக்கு முன்பதிவு கிடைக்கும் பட்சத்தில் விமான சேவைகளை துவங்குவோம் என IndiGo நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன் படி ஹுப்பல்லி-கண்ணூர் மற்றும் ஹுப்பல்லி-கோவா வழித்தடங்களில் மீண்டும் விமான சேவை செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இணைய வழிக்கல்வி: நிழல் நிஜமாகிவிடாது’ என்பதை அரசு உணர வேண்டும்..!


முழு அடைப்பு அமல்படுத்தப்படுவதற்கு முன்னர் மாநிலத்தில் பரபரப்பான விமான நிலையங்களில் ஹுப்பல்லி ஒன்றாகும். இரண்டு மாதங்களாக நடைமுறையில் இருந்த நீண்ட பூட்டுதலுக்கு பின்னர், ஸ்டார் ஏர் மே 25 அன்று பெங்களூரு மற்றும் புது தில்லி வழித்தடங்களில் ஒரு நாள் மட்டுமே விமான சேவையை மீண்டும் தொடங்கியது, ஆனால் பின்னர் பயணிகள் பற்றாக்குறையால் சேவை நிறுத்தப்பட்டது.


இப்போது இண்டிகோ செவ்வாய்க்கிழமை முதல் ஹுப்பல்லியில் இருந்து கேரளா மற்றும் கோவாவின் கண்ணூர் வரை சேவையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த வழித்தடத்தில் பயணிகள் இல்லாததால் திங்கள்கிழமை இரவு இதன் ரத்து செய்யப்பட்டது. ஹுப்பல்லி இருந்து நான்கு பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டதாகவும், கோவா அல்லது கண்ணூருக்கு யாரும் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.


சானிட்டீசரைப் பயன்படுத்திய பிறகும் Coronavirus உயிரோடு இருக்கிறது!! என்ன செய்ய வேண்டும்...


ஹுப்பல்லி விமான நிலைய இயக்குநர் பிரமோத் தக்ரே கூறுகையில், தற்போது வரை குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் உள்ளனர், இந்த மாதத்தில் சேவையைத் தொடங்க எந்த விமான சேவையும் மிகுந்த ஆர்வம் காட்டவில்லை. ஆனால் ஹுப்பல்லிக்கு இயக்கப்படும் விமானவழிகள் ஜூலை மாதத்தில் சேவையைத் தொடங்குவதாக அறிவித்துள்ளன, முன்பதிவுகளையும் தொடங்கியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.