அமேசான் பிரைம் தளத்தில் தாண்டவ் என்ற, ஹிந்தி வலைத் தொட ர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. பாலிவுட் நடிகர், சயீப் அலி கான், நடிகை டிம்பள் கபாடியா உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ள இந்த வலைத் தொடரில்,  பல வசனங்கள் மற்றும் காட்சிகளில், ஹிந்துக்களின் உணர்வுகள் புண்படுத்தும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெரும் சர்ச்சை வெடித்ததோடு, பல்வேறு மாநிலங்களில், இந்த வலைத் தொடரை நீக்க வேண்டும் என வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வலைத் தொடர் தயாரிப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் (SC), மனு ஒன்று தாக்கல் செய்தனர். அதை விசாரித்த நீதிபதிகள் கைதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என தீர்ப்பளித்தனர்.


இந்நிலையில், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் (Prakash Javadekar) ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் OTT தளங்களின் ‘செயல்பாடுகள்’ குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடப்போவதாக அறிவித்தார். ஞாயிற்றுக்கிழமை காலை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், தற்போது, OTT  தொடர்பாக எந்த ஒரு விதிமுறைகளும் இல்லை, விரைவில் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்படும் என்று கூறினார்.


செய்தி நிறுவனமான ANI ட்விட்டரில் அதிகாரப்பூர்வ அறிக்கையை ஒரு பதிவில் பகிர்ந்து கொண்டது, “OTT தளங்களில் உள்ள சில சீரியல்களுக்கு எதிராக எங்களுக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. OTT தளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் வெளியிடப்பட்ட திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் பத்திரிகை கவுன்சில் சட்டம், கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் (ஒழுங்குமுறை) சட்டம் அல்லது தணிக்கை வாரியத்தின் கீழ் வராது. அவற்றின் செயல்பாடு குறித்து விரைவில் வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்படும்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். ”



ALSO READ | ”தாண்டவ்” வலைத் தொடர் சர்ச்சை.. நிபந்தனையற்ற மன்னிப்பை வெளியிட்ட இயக்குநர்..!!!