உரி தாக்குதல்: உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 19-ஆக உயர்வு

உரி பயங்கரவாதிகள் தாக்குதலில் பலி எண்ணிக்கை 19-ஆக அதிகரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உரி நகரில் ராணுவ முகாமிலுள்ள கூடாரத்தில் வீரர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது பயங்கரவாதிகள் அத்துமீறி ஊடுருவி நடத்திய கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். அந்த தாக்குதலில் கூடாரம் தீப்பற்றி எரிந்தது. மேலும் அருகில் இருந்த ராணுவ குடியிருப்புகளுக்கும் தீ பரவியது.
இத்தாக்குதலில், 17 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிழந்தனர். தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் காயமடைந்த வீரர்களில் மேலும் 1 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.
ராணுவ வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.