மும்பை: இந்தியாவில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றான ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல், இந்திய கடற்படையில் இன்று சேர்க்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை கடற்படை தளத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.


இந்தியாவில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய போர்க்கப்பலான ஐ.என்.எஸ். சென்னை, 164 மீட்டர் நீளம் மற்றும் 7500 டன் எடையுடையது. 


ஐஎன்எஸ் சென்னை போர்க் கப்பலை இந்திய கடற்படையின் வடிவமைப்பு இயக்குநரகம் வடிவமைத்தது. ஏவுகணைகளை கொண்டு நீண்ட தொலைவு இலக்குகளை தாக்கும் திறனை இக்கப்பல் பெற்றுள்ளது.


ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தினமான இன்று, இந்திய கடற்படையின் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். கப்பல் உலக தரத்தில் தயாரிக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சென்னையை பெருமைப்படுத்தும் விதமாக கப்பலுக்கு இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்தார். 


இதே போன்று இந்திய தயாரிப்பில் உருவான ஐஎன்ஸ் கொல்கத்தா 2014-ம் ஆண்டும், ஐஎன்எஸ் கொச்சி  2015-ம் ஆண்டும், இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.