ஐ.என்.எஸ். `கரன்ஜ்` நீர்முழ்கி கப்பல் மும்பையில் சோதனை!!
நீர்பரப்பிலும், நிலத்திலும் இருந்துகொண்டே போர்க்கருவிகளை பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். `கரன்ஜ்` நீர்முழ்கி கப்பலின் சோதனை மும்பையில் நடைபெற்றது
நீர்பரப்பிலும், நிலத்திலும் இருந்துகொண்டே போர்க்கருவிகளை பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். 'கரன்ஜ்' நீர்முழ்கி கப்பலின் சோதனை மும்பையில் நடைபெற்றது.
இந்திய கடற்படைக்கு மும்பையில் உள்ள மஜாகான் டாக் ஷிட்பிபைர்ஸ் லிமிடெட் (எம்.டி.எல்.) நிறுவனத்தால், ஐ.என்.எஸ். 'கரன்ஜ்' என்ற நீர்மூழ்கி கப்பல் நிலத்திலும், நீர்பரப்பிலும் இருந்துகொண்டே போர்க்கருவிகளை பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த ஐ.என்.எஸ்.'கரன்ஜ்' நீர்மூழ்கி கப்பல் இன்று மும்பை கடற்பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து விரைவில் ஐ.என்.எஸ். கரன்ஜ்' என்ற நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.