GPF எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை மத்திய அரசு 7.9%-மாக குறைத்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் பொது வருங்கால வைப்பு நிதி (GPF) மற்றும் பிற தொடர்புடைய திட்டங்களுக்கான வட்டி விகிதத்தினை மோடி அரசு ஓரளவு குறைத்துள்ளது. 


கடந்த மூன்று காலாண்டுகளில் 8%-மாக இருந்த வட்டி விகிதம் தற்போது 0.1% குறைவு கண்டுள்ளது. 


PF போன்றே அரசு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து பிடிக்கப்படும் ஒரு பங்களிப்பே GPF. இந்த திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்படும் பணத்தை, ஊழியர்கள் ஒவ்வொரு ஆண்டு அவர்களின் சில அவசர செலவுகளுக்காக அட்வன்ஸாக திரும்பப் பெற முடியும்.


GPF திட்டத்தின் கீழ் பிடித்தம் செய்யப்படும் பணம், ஊழியர்கள் ஓய்வுபெறும் போது திருப்பி அளிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் இடையில் பணம் பற வேண்டும் என்றால் குறைந்த 10 வருடம் பணியிலிருந்திருக்க வேண்டும் அல்லது ஓய்வு பெற வேண்டும். GPF கீழ் பெறப்படும் வட்டி விகிதத்திற்கு வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.


இந்நிலையில் தற்போது GPF எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதத்தை மத்திய அரசு 7.9%-மாக குறைத்துள்ளது.


டிசம்பர் 31, 2003 அன்று அல்லது அதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு GPF விதிகள் பொருந்தும் என்றும், ஊழியர்கள் தங்கள் கணக்கைத் திறக்கும் நேரத்தில் யாரையாவது பரிந்துரைக்கலாம் என்றும், குறைந்த வட்டி விகிதம் மத்திய அரசு ஊழியர்கள், ரயில்வே மற்றும் பாதுகாப்புப் படைகளின் வருங்கால வைப்பு நிதிக்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக PPF திட்டம் மீதான வட்டி விகிதத்தை மத்திய அரசு 8%-லிருந்து 7.9%-மாகக் குறைத்து அறிவித்திருந்தது. அதன்படியே தற்போது GPF வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.