2019-2020 ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை பியுஷ் கோயல் இன்று தாக்கல் செய்ததின் முக்கிய பத்து சிறப்பு அம்சங்கள்.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2019-2020 ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை பியுஷ் கோயல் இன்று தாக்கல் செய்தார். மோடி அரசின் கடைசி பட்ஜெட் என்தால் இடைக்கால பட்ஜெட் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்ப்பட்டுள்ளது. குறிப்பாக நடுத்தர வர்க்கம் பயன்பெறும் வகையில் வருமான வரி விலக்கு மற்றும் உழவர்கள் பயன்பெறும் வகையில் சலுகைகள் இருக்கலாம் எனத் தெரிகிறது.  


இதையடுத்து, நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கலின் போது, தனிநபர் வருமான வரிக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு இரண்டரை இலட்சம் ரூபாயில் இருந்து 5இலட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாத ஊதியதாரர்களுக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சலுகையாக இது கருதப்படுகிறது.


இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் பியூஷ்கோயல் ஆண்டு வருமானம் 5இலட்சம் ரூபாய் வரை உள்ளவர்களுக்கு முழுவதும் வரிக்கழிவு வழங்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பை அனைத்து உறுப்பினர்களும் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.


இன்றைய 2019-2020 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டின் முக்கிய 10 சிறப்பு அம்சங்கள்: 


1. ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை இருந்தால் வரி செலுத்த வேண்டாம்.  


2. வருமான நிரந்தரக் கழிவு ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்வு


3. 2 ஹெக்டர் வரை உள்ள சிறுகுறு விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் என மூன்று தவணைகளாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்


4. மீனவர்களின் நலனுக்காக தனியாக மீன்வளத்துறை அமைச்சகம் புதியதாக உருவாக்கப்படும். 


5. மாதம் ரூ 15000 வரை ஊதியம் பெறும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.3000 வழங்கப்படும். 


6. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒருமுறை வரித்தாக்கல் செய்தால் போதும். 


7. ராணுவத்திற்கு ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு. 


8. பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக அதிகரிப்பு.


9. BF சந்தாதாரர் உயிரிழந்தால் வழங்கப்படும் நிவாரண நிதி 6 லட்சமாக உயர்வு.


10. இந்தியாவில் மின்சாரம் இல்லாத வீடுகளே இல்லாத நிலை மார்ச் மாதத்திற்குள் உருவாகும்.