ப.சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப சிபிஐக்கு இடைக்காலத் தடை...
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க சிபிஐக்கு இடைக்காலத்தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!!
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க சிபிஐக்கு இடைக்காலத்தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!!
INX மீடியா தொலைக்காட்சி நிறுவனம் 2007ஆம் ஆண்டில் 305 கோடி ரூபாய் அந்நிய முதலீடு பெற்றதில் விதிகள் மீறப்பட்டதாக சிபிஐயும் அமலாக்கத்துறையும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
INX மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், CBI காவலுக்கு எதிரான மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசரணைக்கு வந்தது. அப்போது, ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ப.சிதம்பரத்திற்கு 74 வயது ஆவதாகவும், இந்நிலையில் அவரை திகார் சிறையில் அடைக்க வேண்டாம். வீட்டுக்காவலுக்கு தயாராக இருப்பதாக கூறினார்.
இதற்கு எதிராக சிபிஐ தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், ப.சிதம்பரத்தை வரும் செப்.5ஆம் தேதி வரை திகார் சிறையில் அடைக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இன்று மாலைக்குள் ப.சிதம்பரம் கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யும் படி அறிவுறுத்திய நீதிமன்றம், ப.சிதம்பரம் மனு நிராகரிக்கப்பட்டால் செப்., 5 ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.