தண்ணீர் மற்றும் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் தொடர்ப்பான 4 நாள் சர்வதேச மாநாடு ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தண்ணீர் தட்டுப்பாடு தொடர்பாக பிரச்சணைகள் நாடுமுழுவதும் ஓங்கி வரும் நிலையில் தண்ணீர் மற்றும் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் தொடர்ப்பாக 'வேளாண் மற்றும் இயற்கை வளத்திற்கான உலகளாவிய நீர் பாதுகாப்பு மாநாடு' வரும் அக்டோபர் 3-ஆம் நாள் முதல் 6-ஆம் நாள் வரை ஐதராபாத்தில் நடைப்பெறவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.


அமெரிக்கன் வேளாண் மற்றும் உயிரியல் பொறியியலாளர் சங்கம் (ASABE) மற்றும் இந்திய சமூக வேளாண்மை பொறியியலாளர்கள் சங்கம் (ISAE) இணைந்து இந்த 'வேளாண் மற்றும் இயற்கை வளத்திற்கான உலகளாவிய நீர் பாதுகாப்பு மாநாட்டினை' ஒருங்கினைப்பு செய்கின்றனர். 


2050-ஆம் ஆண்டிற்குள் 9.6 பில்லியன் மக்களுக்கு உணவளிக்கும் உணவு உற்பத்தியில் 70 சதவீதத்தை உயர்த்துவதற்காகவும், விவசாயத்திற்கும் இயற்கை வளத்திற்கும் உள்ள நீர் தேவையினை 20 சதவீதத்திற்கு உயர்த்துவதையும் இந்த மாநாடு கொள்கையாக கொண்டுள்ளத என இம்மாநாட்டின் இணைத் தலைவர் இண்ட்ராஜீத் சௌபே தெரிவித்துள்ளார்.


இந்நிகழ்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள், விவசாயிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்டோர் பலர் பங்கேற்பர் என பர்டு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரும், வேளாண்மை நிகழ்ச்சிகளின் சர்வதேச நிகழ்ச்சித் திட்ட இயக்குனருமான சியுபே தெரிவித்துள்ளார்.


"இந்தியா நீர் தட்டுப்பாடு குறித்த பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. இந்த சவால்களை எதிர்கொள்ள இந்தியா ஒரு கணிசமான முன்னேற்ற நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. இந்த சவால்களை எதிர்கொள்வது எவ்வாறு என்பது குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என இந்திய மாநகர சபை தலைவர், வேளாண் பொறியியலாளர், வேளாண் பொறியியலாளர் இண்ட்ரா மானி தெரிவித்துள்ளார்.


ASABE மற்றும் ISAE ஆகியவை வேளாண், உணவு, மற்றும் உயிரியல் அமைப்புகளில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்காக கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகும்.


இந்த இரு அமைப்பகளும் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியில் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஏ.சந்துலுல் கலந்து கொண்டு சிறப்பிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.