ஜூலை 15 வரை சர்வதேச விமானங்கள் இயங்காது.. ஆனால் சில பாதைகளில் அரசு அனுமதிக்கலாம்
ஜூலை 15 ஆம் தேதி வரை நாட்டில் சர்வதேச விமான நடவடிக்கைகளை நிறுத்த சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
புது டெல்லி: நாட்டில் கொரோனா வைரஸ் (Coronavirus) தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அடுத்து, ஜூலை 15 ஆம் தேதி வரை நாட்டில் சர்வதேச விமான (International Flights) நடவடிக்கைகளை நிறுத்த சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (Civil aviation ministry) முடிவு செய்துள்ளது. கோவிட் -19 பரவலைத் (Spread of COVID-19 ) தடுக்க மார்ச் கடைசி வாரத்தில் இந்தியா அனைத்து விமான நடவடிக்கைகளையும் நிறுத்தியது. கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து உள்நாட்டு விமான நடவடிக்கைகள் மே 25 அன்று மீண்டும் தொடங்கப்பட்டன.
இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் (Selected Routes) சர்வதேச விமானங்களை அனுமதிக்க மத்திய அரசு இன்று முடிவு செய்துள்ளது. "சர்வதேச திட்டமிடப்பட்ட விமானங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் தகுதி வாய்ந்த அதிகாரத்தால், கொரோனா தொற்று அடிப்படையில் அனுமதிக்கப்படலாம்" என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
RED | விமானங்களில் நடுத்தர இருக்கையை காலியாக வைக்க வேண்டிய அவசியமில்லை..!
RED | ஊரடங்கால் மோசமான நிலையில் இந்த airlines...கலங்கி போன ஊழியர்கள்
RED | ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான டிக்கெட் பணத்தை எப்படி பெறுவது? தெரிந்து கொள்ளுங்கள்