மணிப்பூரில், மே மாதம் தொடங்கி வன்முறை சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டாலும், அவ்வப்போது தலை தூக்கி வருகின்றன. மணிப்பூரில் ஏற்பட்ட புதிய மோதலில், பாதுகாப்புப் பணியாளர்களின் வீட்டிற்கு ஒரு கும்பல் தீ வைத்தது.மணிப்பூரின் தௌபல் மாவட்டத்தில், போலீஸ் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து துப்பாக்கிகளை கொள்ளையடிக்கும் கலகக்காரர்களின் முயற்சியை முறியடித்த இந்திய ரிசர்வ் பட்டாலியன் (ஐஆர்பி) வீரர் ஒருவரின் வீட்டை ஒரு கும்பல் தீ வைத்து எரித்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். மேலும், முகாமுக்குச் செல்லும் வழியில் வந்த அஸ்ஸாம் ரைபிள்ஸ் குழுவினர் மீது கும்பல் தாக்குதல் நடத்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாங்பாலில் உள்ள 3வது IRB இன் முகாமில் 700-800 பேர் கொண்ட கும்பல் தாக்க முயன்றபோது ஏற்பட்ட மோதலில் ரொனால்டோ என அடையாளம் காணப்பட்ட 27 வயது நபர் கொல்லப்பட்டதை அடுத்து, செவ்வாய்கிழமை இரவு சமரம் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது. போலீஸ் ஆயுதக் களஞ்சியத்தில் இருந்து துப்பாக்கிகளை கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் பணியில் இருந்த ஜவான் தனது கடமையை சிறப்பாகச் செய்து, காவல்துறை ஆயுதக் கடையை கொள்ளையடிக்க கலவரக்காரர்களை  அனுமதிக்கவில்லை என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் காங்போக்பி, இம்பால் மேற்கு மற்றும் சுராசந்த்பூர் மாவட்டங்களில் புதன்கிழமை மாநில காவல்துறை மற்றும் மத்தியப் படைகளின் ஒருங்கிணைந்த குழுவால் நான்கு பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.


இதற்கிடையில், மணிப்பூர்  அரசு புதன்கிழமை மாநிலத்தில் இணைய சேவைகளுக்கான தடையை ஜூலை 10, 2023 வரை நீட்டித்துள்ளது. மணிப்பூர் உள்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், உயிரிழப்பு, பொதுமக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என கூறப்பட்டுள்ளது.


"டெலிகாம் சேவைகள் (பொது அவசரநிலை அல்லது பொது பாதுகாப்பு) விதிகள், 2017 இன் விதி 2 இன் கீழ், சாடம் ஒழுங்கை பராமரிக்க  வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதன் மூலம்,  பிராட்பேண்ட் உள்ளிட்ட மொபைல் டேட்டா சேவைகள், இணையம்/டேட்டா சேவைகளை மீதான தடையை நீட்டிக்க உத்தரவிடப்பட்டிள்ளது" என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளாக், BSNL FTTH, VPN மற்றும் மணிப்பூர் மாநிலத்தின் பிராந்திய அதிகார வரம்பில் உள்ள பாரத்நெட் ஃபேஸ்-II இன் VSATS மூலம் இணையம்/டேட்டா சேவைகள் அனைத்தும் இதில் அடங்கும்" என்று அது மேலும் கூறியது.


மேலும் படிக்க | பற்றி எரியும் மணிப்பூர்.... மெய்ட்டி - குகி சமூகங்கள் மோதிக் கொள்வது ஏன்!


அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இந்த இடைநீக்க உத்தரவு ஜூலை 10 ஆம் தேதி மாலை 3:00 மணி வரை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இந்த உத்தரவு மேலும் ஐந்து நாட்களுக்கு அமலில் இருக்கும். மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு நிலைமையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பொதுமக்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில், சில சமூகவிரோதிகள் படங்கள், வெறுப்பூட்டும் பேச்சு மற்றும் வெறுப்பு வீடியோ செய்திகளை பரப்புவதற்கு சமூக ஊடகங்களை பரவலாகப் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சம் உள்ளது என்றும் அது கூறியது.


முன்னதாக புதன்கிழமை மணிப்பூர் அரசாங்கத்தின் கட்டுபாட்டின் கீழ் உள்ள பள்ளிகள் மே 3 அன்று மலைப்பாங்கான மாநிலத்தில் வெடித்த இன வன்முறை காரணமாக இரண்டு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்ட பின்னர், 1-8 வகுப்புகளுக்கான சாதாரண வகுப்புகள் புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டன. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீடித்த கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


மே 3 ம் தேதி மணிப்பூரில் அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் (ATSU) நடத்திய பேரணியின் போது ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, மெய்டி இன மக்களை பட்டியல் பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன வன்முறை வெடித்தது. மணிப்பூரில் ஏற்பட்ட மோதலில் பலர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். அதே நேரத்தில் வன்முறையில் 130 க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.


மேலும் படிக்க | மணிப்பூர் கலவரத்தில் தடை செய்யப்பட்ட சீன பைக்குகள்... இந்தியாவிற்கு வந்தது எப்படி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ