மணிப்பூர் கலவரத்தில் தடை செய்யப்பட்ட சீன பைக்குகள்... இந்தியாவிற்கு வந்தது எப்படி!

மணிப்பூர் கலவரத்தில் கலவரக்காரர்கள் தடை செய்யப்பட்ட பைக்குகள் சீன பிராண்டான கென்போ பைக்கை பயன்படுத்தியுள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 27, 2023, 05:28 PM IST
  • மாநிலத்தில் நடந்த வன்முறையின் போது, ​​6,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 144 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • வன்முறையின் போது 5,000க்கும் மேற்பட்ட தீவைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.
  • தடை செய்யப்பட்ட பைக்குகள் சீன பிராண்டான கென்போவைச் சேர்ந்தவை.
மணிப்பூர் கலவரத்தில் தடை செய்யப்பட்ட சீன பைக்குகள்... இந்தியாவிற்கு வந்தது எப்படி! title=

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் உள்ள குக்கி மற்றும் மெய்டி சமூகத்தினரிடையே இடஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக வன்முறை மோதல்கள் நடைபெற்று வருகின்றன. வன்முறையில் இதுவரை சுமார் 130 பேர் உயிரிழந்துள்ளனர். 400க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அதே சமயம், வன்முறையின் போது 5,000க்கும் மேற்பட்ட தீவைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

மாநிலத்தில் நடந்த வன்முறையின் போது, ​​6,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 144 பேர் கைது செய்யப்பட்டனர். சட்டம் ஒழுங்கை பராமரிக்க 36,000 பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் 40 ஐபிஎஸ் அதிகாரிகளையும் அரசு பணியில் ஈடுபடுத்தியுள்ளது.  இந்நிலையில், மணிப்பூர் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட குழுக்கள் தடைசெய்யப்பட்ட சீன பைக்குகளை வன்முறைக்கு பயன்படுத்துவதைக் காட்டும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கசிந்துள்ளது.

தடை செய்யப்பட்ட பைக்குகள் சீன பிராண்டான கென்போவைச் சேர்ந்தவை. சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள டெஹோங்ஜோருய்லியை தளமாகக் கொண்ட யுன்னான் யின்சியாங் மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனம் லிமிடெட் மூலம் இந்த பிராண்ட் பைக்கை தயாரிக்கிறது. கென்போ பைக்கின் விலை ரூ.25,000க்குள் இருக்கும். இது இந்திய பைக்கின் விலையில் நான்கில் ஒரு பங்காகும். இந்த பைக்குகள் ஒப்பீட்டளவில் இலகுவானவை மற்றும் குறைந்த இயந்திர திறன் கொண்டவை.

மலிவு விலையில் விற்கப்படும் மோட்டார் சைக்கிள்கள், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டாலும், மக்களுக்கு சிறிய பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றன. ஊடக அறிக்கைகளின்படி, மணிப்பூரில் நடந்து வரும் வன்முறையின் போது கைப்பற்றப்பட்ட இரு சக்கர வாகனங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை கனேபோ பைக்குகள்.

சீன பீரங்கி ரக பைக்குகளும் வன்முறையில் அதிகம் பயன்படுத்தப்பட்டன, குறிப்பாக வன்முறையால் பாதிக்கப்பட்ட மலை மாவட்டங்களான உக்ருல் மற்றும் கம்ஜோங் ஆகிய இடங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டன. இந்த 125 சிசி பைக்குகள் மலைப்பகுதிகளில் ஏராளமாக உள்ளன. இந்தியா - மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ள உக்ருல், கம்ஜோங், தெங்னௌபல் மற்றும் சுராசந்த்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள போலீசார் கடந்த காலங்களில் இந்த பைக்குகளை கைப்பற்ற எந்த பெரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க |  பற்றி எரியும் மணிப்பூர்.... மெய்ட்டி - குகி - நாகா சமூகங்கள் மோதிக் கொள்வது ஏன்!

மணிப்பூரில் சீன பைக்கிற்கு தடை

மியான்மரில் இருந்து போதைப்பொருள் கடத்த பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த சீனத் தயாரிப்பு பைக்குகளுக்கு மணிப்பூர் மற்றும் மிசோரம் அரசுகள் செப்டம்பர் 2021 இல் தடை விதித்தன. பிரபல பைக், கனேபோ, கறுப்பு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு, பதிவு செய்யாமல் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

மணிப்பூரில் கடந்த மார்ச் மாதம் தடை செய்யப்பட்ட பைக்குகள் மீது மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்பகுதியில் பைக்குகள் பறிமுதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான கைதுகள் குறித்து முதல்வர் என் பிரேன் சிங் பல ட்வீட்களை செய்தார். மோட்டார் சைக்கிள்களில் அபின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் ஏற்றப்பட்டிருந்ததாகவும் முதல்வர் கூறினார்.

மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பல கென்போ பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, அவை முக்கியமாக கசகசா விதைகள் மற்றும் போதைப்பொருட்களை குறுகிய மற்றும் கடுமையான பகுதிகளில் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டன" என்று அவர் கூறியிருந்தார்.

மியான்மரில் பயன்படுத்தப்பட்ட 20.26 கிலோ கசகசா மற்றும் நான்கு இருசக்கர வாகனங்களை மாநில காவல்துறை கைப்பற்றியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வந்தது. காங்போக்பி மாவட்டத்தின் ஓல்ட் போல்சாங் கிராமத்தில் இரண்டு இளைஞர்களையும் அவர்கள் கைது செய்தனர்.

மீடியா அறிக்கைகளின்படி, பைக்கின் பாகங்கள் சீனாவின் யுனான் மாகாணத்திலிருந்து தாய்லாந்து வழியாக மியான்மர் மற்றும் மணிப்பூரில் உள்ள ஒரு சிறப்பு டீலரை அடைவதற்கு முன்பு கொண்டு வரப்பட்டுள்ளன. இவை உக்ருல் மற்றும் கம்ஜோங்கில் வைக்கப்பட்டன. மணிப்பூரில் இந்த பைக்குகளை சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் அபின் வியாபாரத்திற்கும் பயன்படுத்திய சமபவம் முன்னதாக நடந்துள்ளது. இப்போது இந்த பைக்கும் மணிப்பூர் வன்முறையில் மற்றொரு ஆயுதமாக மாறியுள்ளது.

மேலும் படிக்க | முத்தலாக் முறைக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை! பொது சிவில் சட்டம் அவசியம்-பிரதமர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News