கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் ஆண்டு ஜம்மு- காஷ்மீர் (Jammu kashmir) மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது மத்திய அரசு. அதாவது சட்ட பிரிவு 370 நீக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது முதல், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்கவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், அதிவேக 4G இணைய சேவை மாநிலம் முழுவதும் துண்டிக்கப்பட்டு 2G சேவைகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.


முன்னதாக கொரோனா தொற்று (Corona Virus) பரவி வரும் சூழ்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் பாதிக்கப்படுகிறது என்பதால் 4G சேவையை மீண்டும் வழங்க வேண்டும் என்று பலர் வழக்கு தொடர்ந்தனர்.


இதை அடுத்து, கடந்த ஆண்டு ஜம்மு – காஷ்மீரின் இரண்டு மாவட்டங்களில் மட்டும் 4G சேவை  மத்திய அரசு (Central Government) தொடங்கியது. ஆனால், அதை அடுத்து இணைய சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வலுடைந்து வந்த நிலையில், இன்று முதல் மீண்டும் 4G சேவை தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



ALSO READ | Farmers Protest: அமித் ஷா உள்ளிட்ட உயர் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR