ஜூலை1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் தொழில்நுட்பம் கொண்ட புதிய வசதியை துவக்க உள்ளதாக இந்திய தனித்த அடையாள ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான உதய் (UDAI) இன்று தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என மத்திய அரசு கூறி வருகிறது.வங்கிக் கணக்கு, மொபைல் எண், பான் எண் உள்ளிட்டவைகளும் ஆதாருடன் இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு கூறி வருகிறது.


மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து வழக்குகளும் போடப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.


இருப்பினும், ஆதாரில் உள்ள கைரேகையுடன், பலரின் கைரேகைக்கு ஒத்துப் போவதில்லை என்ற பல குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த பிரச்னையை சரி செய்வதற்காக முகம் கண்டறியும் தொழில்நுட்பம் ஆதாரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வரும் ஜூலை 1 முதல் இந்த புதிய வசதியை துவக்க உள்ளதாக இந்திய தனித்த அடையாள ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான உதய் (UDAI) இன்று தெரிவித்துள்ளார்.