தப்லிகி ஜமாத் தலைவருக்கும் தாஹிர் உசேனுக்குமான தொடர்பு உண்மை: அமலாக்கத் துறை
தப்லிகி ஜமாத் தலைவர் மெளலானா சாதுக்கும் தாஹிர் உசேனுக்குமான தொடர்பை அமலாக்கத் துறையின் விசாரணை உறுதிப்படுத்துகிறது
புதுடில்லி: வருமான வரித் துறையைத் தவிர, தொற்று நோய்கள் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம் (2005) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள தப்லிகி ஜமாத் தலைவர் மெளலானா சாத் கந்தால்வியை சுற்றி வளைத்த அமலாக்க இயக்குநரகம் (Enforcement Directorate (ED)) தற்போது அவர் மீதான தனது பிடியை இறுக்க உள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவலினால் நாடே கொந்தளித்துப் போயிருந்த நிலையில், அதிகமானவர்கள் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நிஜாமுதீன் மார்கஸில் (Nizamuddin Markaz) மதக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புடன் நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் சென்றபோது, கொரோனா அதிவிரைவாக பரவியது. கோவிட் -19இன் காரணமாக பலர் இறந்ததை அடுத்து அதிர்ச்சி அலைகள் எழுந்தன. கொலை செய்யும் நோக்கமில்லாமல் செய்யப்பட்ட கொலை (culpable homicide) என்ற பிரிவில் சாத் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
அவர் மீது பணமோசடி குற்றச்சாட்டுகளும் பதியப்பட்டுள்ளது.
Also Read | லாக்டவுன் ஆகுமா தங்கத்தின் விலை?
அறிக்கையின்படி, சாத் மற்றும் பிற தப்லிகி ஜமாத் உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளை ஆராய்ந்தபோது, ஜமாத் தலைவருக்கு எதிராக ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவை வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறை கலகத்துடன் தொடர்புடையவை. சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ தாஹிர் உசேன் மற்றும் வேறொரு கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஃபைசல் பாரூக்கி ஆகியோருடன் மெளலானா சாதுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஃபைசல் பாரூக்கி டெல்லி ராஜ்தானி பள்ளியின் உரிமையாளர் ஆவார்.
கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் விசாரணையில் தாஹிர் உசேன் மற்றும் அவருடன் தொடர்புடைய பிற நபர்கள் மீது பல்வேறு சோதனைகள் மற்றும் தேடல்களை நடத்தியது. இதில் பல்வேறு ஆவணங்கள் மீட்கப்பட்டது. சாத், தாஹிர் மற்றும் பாரூக்கி ஆகிய மூவரும் கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான சொத்துக்களை சேர்த்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
டெல்லி கலவரத்தின் சூத்திரதாரி ஃபைசல் பாரூக்கியின் ஆடம்பரமான ராஜதானி பள்ளியின் கட்டிடத்திற்கு மெளலானா சாத் முதலீடு செய்துள்ளது அமலாக்க இயக்குநரகரத்தின் (ED) விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத்தவிர, சாத் தன்னிடம் இருந்த கறுப்புப் பணத்தை ஃபாரூகிக்கு சொந்தமான மற்றொரு பள்ளியிலும் முதலீடு செய்திருப்பதும் அம்பலமானது.
Also Read | தண்ணீருக்குள் தன்னை மறந்த நடிகை ஸ்ருதிஹாசனின் கவர்ச்சிப் புகைப்படங்கள்
அலீம், ஜமாத் தலைவரின் பணம் மற்றும் முதலீடுகளின் முழு பரிவர்த்தனையையும் நிர்வகித்தவர் மெளலானா சாதின் உறவினரும், அவருக்கு நெருங்கியவருமான அலீம் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. அதுமட்டுல்ல, அலீம், மார்கசுக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த நிதியை மேற்பார்வையிட்டு, நிர்வகிக்கும் வேலையையும் மேற்கொண்டார்.
டெல்லி கலவரத்தின்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்களின் விவரங்கள் சேமிக்கப்பட்டது. அந்தத் தரவுகளில் இருந்து அலீம் மற்றும் பைசல் பாரூக்கி ஆகியோருக்கு இடையில் தொடர்ந்து பலமுறை உரையாடல்கள் நிகழ்ந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நிறுவனம் கண்டறிந்தது. மெளலானா சாதின் மகனுக்கும் அலீமின் சகோதரியின் மகளுக்கும் திருமணம் நடந்து, இருவரும் நெருங்கிய உறவினர்களாகவும் மாறிவிட்டனர்.
நிஜாமுதீன் மார்க்கஸின் தினசை நடவடிக்கைகளை நிர்வகித்து வந்த அலீம் தக்லிபி ஜமாதின் மார்க்கஸில் தான் வசித்து வந்தார்.
Also Read | கிளி மற்றும் லங்கூர் வளர்த்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
டெல்லியின் ஜாகிர் நகரில் உள்ள ஒரு சொகுசு பங்களாவில் கடந்த மூன்று மாதங்களாக மெளலானா சாத் ஒளிந்து கொண்டிருக்கிறார். இந்த பங்களா அலீமுக்கு சொந்தமானது என்றும், இந்த பங்களாவிலும் மெளலானா சாத் முதலீடு செய்துள்ளார் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
பல இடங்களில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பினாமி சொத்துக்கள் மெளலானா சாதுக்கு இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த விவகாரமும் விசாணையில் உள்ளது.
அலீம் மற்றும் மெளலானா சாதின் மூன்று மகன்கள் உட்பட மார்க்கஸுடன் தொடர்புடைய பலரிடமும் ED விசாரணை மேற்கொண்டுள்ளது. எந்தப் புற்றில் இருந்து பாம்பு வெளிப்படும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்!