செப்டம்பர் 19 வரை ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடையுங்கள்: சிறப்பு நீதிமன்றம்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு.
18:35 05-09-2019
ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தின் உத்தரவு அடுத்து ப.சிதம்பரத்தை திகார் சிறைக்கு அழைத்து செல்ல போலீஸ் பேருந்தது நீதிமன்றத்துக்கு வெளியில் நின்றுகொண்டு இருக்கிறது. சிதம்பரம் இன்னும் நீதிமன்றத்திற்குள் தான் இருக்கிறார்.
புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா தொலைக்காட்சி நிறுவனம் 2007 ஆம் ஆண்டில் 305 கோடி ரூபாய் அந்நிய முதலீடு பெற்றதில் விதிகள் மீறப்பட்டதாகவும், அப்போதைய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அதற்கு உதவி செய்ததாக கூறி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி இரவு ப. சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.
அடுத்த நாள் அவரை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தினர். 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதனையடுத்து மீண்டும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி மீண்டும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தப்பட்டார் ப. சிதம்பரம், மேலும் 4 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. மீண்டும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி 2 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த திங்கக்கிழமை மீண்டும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் ஆஜார்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் செப்., 5 ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது.
இந்தநிலையில், 15 சிபிஐ காவலில் இருந்த ப.சிதம்பரத்தின் காவல் முடிந்ததால், அவர் மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்பொழுது சிபிஐ தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா, 15 நாட்கள் ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலுக்கு அனுப்புங்கள் என்று கோரிக்கை வைத்தது. இதனையடுத்து தற்போது கபில் சிபில் வாதாடி வருகிறார். அவர் ப.சிதம்பரத்தை ஜாமீனில் அனுப்ப வேண்டும் எனக்கூறவில்லை. அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என வாதிடுகின்றேன் என்று கூறினார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவு பிற்பித்துள்ளார்.