புதுடெல்லி: சிறைக்கு செல்வதை தவிர்ப்பதற்காக ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தன்னை திங்கள் கிழமை வரை சிபிஐ காவலில் வைத்து இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒன்று அமலாக்கத்துறை தன்னை கைது செய்ய கூடாது என்றும், மற்றொன்று ஐஎன்எக்ஸ் வழக்கில் சிபிஐ கைதுக்கு எதிராக முன் ஜாமீன் கேட்டும், வேறொன்று சிபிஐ தன்னை கைது செய்ததை எதிர்த்தும் மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.


அமலாக்கத்துறையின் பண மோசடி வழக்கில் முன் ஜாமீன் கோரி போடப்பட்ட மனு மீதான விசாரணையில் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஐஎன்எக்ஸ் வழக்கில் சிபிஐ கைதுக்கு எதிராக முன் ஜாமீன் வழக்கு விசாரணை வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. சிபிஐ தன்னை கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை அடுத்த வாரம் நடைபெற உள்ளது.


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி இரவு ப. சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. அடுத்த நாள் அவரை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தினர். 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதனையடுத்து மீண்டும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி மீண்டும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தப்பட்டார் ப. சிதம்பரம், மேலும் 4 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.


இந்த நிலையில், இன்று மீண்டும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தப்பட உள்ளார் ப. சிதம்பரம். ஒருவேளை அவருக்கு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கிடைக்கவில்லை என்றால் ப.சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் சிபிஐ கைதுக்கு எதிராக முன் ஜாமீன் வழக்கு விசாரணை அடுத்த வாரம் நடைபெற உள்ளதால், இதுவரை பெயில் கிடைக்காததால், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்படுவார்.


இந்த சூழ்நிலையில், திகார் சிறைக்கு செல்லாமல் இருக்க ப. சிதம்பரம் ஒரு முடிவு எடுத்துள்ளார். அதாவது வரும் திங்கட்கிழமை வரை சிபிஐ காவலிலேயே தொடர முடிவு எடுத்துள்ளார். இதுக்குறித்து நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்று தெரியவில்லை.