CRED என்ற கிரெடிட் கார்டு நிறுவனத்தை IPL விளையாட்டு தொடரியின் பங்குதாரராக BCCI அறிவித்துள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

13-வது IPL விளையாட்டு தொடர் வருகின்ற செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அமீரகத்தில் நடக்க உள்ளது. இதை தொடர்ந்து இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், CRED என்ற கிரெடிட் கார்டு தொகை செலுத்தும் நிறுவனத்தை IPL விளையாட்டு தொடரியின் பங்குதாரராக அறிவித்துள்ளது. 


IPL தொடரில் விளையாட 8 அணி வீரர்களும் ஐக்கிய அமீரகம் சென்றுள்ளனர். நட்சத்திர ஓட்டல்களில் தங்கியுள்ள 8 அணி வீரர்களும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ஆகஸ்டு 20 ஆம் தேதியில் IPL போட்டி முடியும் வரை சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சுகாதார மையத்தை பிசிசிஐ நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த கொரோனா பரிசோதனைகளுக்கு மட்டும் 10 கோடி ரூபாயை செலவு செய்ய இருப்பதாக BCCI தெரிவித்துள்ளது. 


ALSO READ | வீடு & வாகனக் கடனுக்கான வட்டி வீதத்தை குறைத்த இந்தியன் வங்கி..!


இந்நிலையில், CRED என்ற கிரெடிட் கார்டு நிறுவனத்தை IPL விளையாட்டு தொடரியின் பங்குதாரராக BCCI அறிவித்துள்ளது. மேலும், கடந்த சனிக்கிழமை அன்று BCCI யுனகாடமியை மூன்று ஆண்டுகளுக்கு அதிகாரப்பூர்வ கூட்டாளியாக அறிவித்தது. இதை பற்றி பேசிய IPL நிர்வாகி பிரிஜேஷ் படேல் "இந்தியன் பிரீமியர் லீக் 2020 முதல் 2022 வரை நடக்க உள்ள விளையாட்டு தொடரியின் அதிகாரப்பூர்வ கூட்டாளராக  யுனகாடமியைக் கொண்டிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.



சீன தொலைபேசி நிறுவனமான விவோவுக்கு பதிலாக பிசிசிஐ இந்த ஆண்டு ஐபிஎல் தலைப்பு ஆதரவாளராக  கேமிங் தளமான ட்ரீம் 11-யை அறிவித்தது.