கடந்த 2006-ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த போது, ரயில்வே துறைக்கு சொந்தமான பாரம்பரிய ஓட்டல்களை மேம்படுத்த ஒப்பந்தம் செய்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி லாலு பிரசாத், அவரது மனைவி(ராப்ரி தேவி) மற்றும் மகன்(தேஜஷ்வி) மீது சி.பி.ஐ. வழக்கும் பதிவு செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விசாரணை தொடர்பாக நேரில் ஆஜராகும்படி இவர்களுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. ஆனால் தங்களுக்கு 15 நாள் கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். எனவே அக்., மாதம் 5, 6-ம் தேதிகளில் ஆஜராகும்படி சிபிஐ கூறியிருந்தது.


இந்நிலையில், சிபிஐ கூறியபடியே, இன்று காலை லாலு பிரசாத் யாதவ் சிபிஐ அதிகாரிகள் முன் நேரில் ஆஜரானார்.