முசாபர்நகர்: உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மொராதாபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி இன்று உரையாற்றினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாஜக தனது பிரச்சாரத்தை முன்னெடுத்து வந்துள்ள மொரதாபாத் மாநில பேரணி மோடிக்கு நான்காவது ஆகும். இதற்க்கு முன்பு காசிபூர், ஆக்ரா மற்றும் குஷிநகர் போன்ற இடங்களில் பரிவர்த்தன் கூட்டத்தில் பிரதமர் அவர்கள் உரையாற்றினர்.


அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி:-


* 2009-ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் மொராதாபாத் வருகை நான் தந்துள்ளேன்


* நாட்டில் உள்ள வறுமையை ஒழிக்க வேண்டுமானால் உத்தரப்பிரதேசம், பீகார், மராட்டியம் போன்ற பெரிய மாநிலங்களை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும்


* நான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் போட்டியிட்டது எம்.பி.யாவதற்காக மட்டுமல்ல, இந்த பெரிய மாநிலத்தில் இருந்து வறுமையையும் ஒழிக்க வேண்டும் என்பதற்காகதான் போட்டியிட்டேன்.


* மொராதாபாத் நகரம் பித்தளை பாத்திரங்கள் உருவாக்கும் தொழிலுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற நகரமாகும்.


* சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பல கிராமங்களில் மின்சார வசதி பெறாமல் உள்ளது அது ஏன் என்று நான் பிரதமராக ஆட்சி பொறுப்பை ஏற்றதும் தனிப்பட்ட முறையில் அதிகாரிகளிடம் கேட்டேன்


* டெல்லி செங்கோட்டையில் உரையாற்றியபோது, இன்னும் 1000 நாட்களில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்புகள் அளிக்கப்படும் என்ற வாக்களித்த படி நான் அதை நிறைவு செய்தேன்.


* மக்களாகிய நீங்கள்தான் எனக்கு உயரதிகாரிகள். 


* இந்த நகருக்கு நான் தாமதமாக வந்தாலும், உங்களது மின்சார தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் இங்கு வந்துள்ளேன்.


* நாட்டை கொள்ளையடித்தவர்களை அடையாளம் காட்டியதற்காக சிலர் என் மீது குற்றம்சாட்டுவதை அறிந்து எனக்கு ஆச்சரியமாக உள்ளது.


* நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டுமா? அல்லது, நிலைத்திருக்க வேண்டுமா? என்று பிரதமர் மக்களிடம் கேட்டார்


* கருப்பு பணத்தை குவித்து வைத்திருப்பவர்கள் இன்று ஏழை மக்களின் உதவிக்காக அவர்களின் வீட்டு வாசலில் வரிசையில் நிற்கிறார்கள். நேர்மையற்றவர்களான அவர்களால் நேரடியாக வங்கிக்கு சென்று பணத்தை போட முடியாது என்பதால் ஏழை மக்களின் மூலம் மாற்ற முயற்சிக்கிறார்கள்.


* ஏழை மக்களுக்காக துவக்கிய ஜன்தன் கணக்கை கறுப்பு பண பதுக்கல்காரர்கள் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள் என்று நினைத்து நான் துன்பம் அடைகிறேன்.


* இந்த நாடு கருப்பு பணத்திற்கு ஏதிராக உள்ளது, இன்று இந்த ஊழளை உடைக்க பொதுமக்கள் முன் வந்துள்ளார்கள் 


* நான் உறுதி கொள்கிறேன் உங்களது கடின உழைப்பு, தியாகம், போராட்டம் வீணாய் போகவிடமாட்டேன்.


* வெள்ளை டி-சட்டைகள் அணிந்த இந்த மக்கள், டிஜிட்டல் பரிமாற்றங்கள் பற்றி பொதுமக்களுக்கு புரியவைக்கிறார்கள் 


* 70 ஆண்டுகளாக பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களுக்காக வரிசையில் நின்றார்கள், இந்த வரிசையே (வங்கியின் வெளியே) அனைத்து வரிசையின் கடைசி வரிசை ஆகும் என்று பிரதமர் மோடி உரையாடினார்.