புதுடெல்லி: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான முக்கிய அறிவுப்புகளை வெளியிட்டுள்ளனர். 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் 234 இடங்களுக்கும், புதுச்சேரியில் 30 இடங்களுக்கும், கேரளாவில் 140 இடங்களுக்கும், அசாமில் 126 இடங்களுக்கும், மேற்கு வங்கத்தில் 294 இடங்களுக்கும்,  வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.


கொரோனா தொற்று அச்சத்திற்கு மத்தியில் 2020 நவம்பரில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு, இந்த தேர்தல்கள் நடைபெற உள்ளன. பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஏற்படுத்தப்பட்ட அதே நெறிமுறையை தேர்தல் ஆணையம் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Also Read | தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6 அன்று சட்டமன்ற தேர்தல்கள் நடக்கும்: தலைமை தேர்தல் ஆணையர்


இந்த நிலையில், ஆன்லைன் மூலம் தேர்தலில் போட்டியிட விண்ணப்பிப்பது, வாக்களிக்கும் நேரத்தை நீட்டிப்பது போன்ற செயல்முறைகள் அமல்படுத்தப்பட்டால், இந்த தொற்றுநோய் காலத்தை சமாளித்து விட முடியுமா என்ற கேள்விகளும் எழுகின்றன.


அசாம், மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் 824 சட்டமன்ற இடங்களுக்கு 2.7 லட்சம் வாக்குச் சாவடிகளில் 18.68 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெறுவார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


மொத்தம் நான்கு மாநிலங்களுக்கும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கும் சட்டசபை தேர்தலை நடத்தும்போது கோவிட் -19 வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை தேர்தல் ஆணையம் வலியுறுத்துகிறது.


Also Read | முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு அருகில் காரில் வெடிபொருட்கள், அச்சுறுத்தல் கடிதம்


சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகளை அறிவிக்கும் போது, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, வாக்களிப்பதற்கு கூடுதல் மணிநேரம் அனுமதிக்கப்படும் என்றும், வேட்பாளர்கள் ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கூறினார்.


தேர்தலுக்கு முன்னர் அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் கோவிட் -19 க்கு தடுப்பூசி போடப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கோவிட் வழிகாட்டுதல்கள்: “கோவிட் நோய்க்கு தடுப்பூசி கிடைத்துள்ளது தேர்தல்களுக்கு நிலைமையை சாதகமாக மாற்றியுள்ளது. தேர்தல் பணியில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை கொடுக்கப்படும்” என்று தேர்தல் ஆணையர் கூறினார்.


வீட்டுக்கு வீடு வீடாக பிரச்சாரம் செய்வது என்பது வேட்பாளர் உட்பட ஐந்து பேர் என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இருப்பினும், சாலைப் பேரணிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளன.


Also Read | சுகாதார காப்பீடு குறித்த good news: இனி இந்த நோய்களுக்கும் காப்பீடு உண்டு!!


சிக்கலான மற்றும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் வெப்காஸ்டிங் ஏற்பாடுகள் நடைபெறும் என்றும், போதுமான சிஏபிஎஃப் (மத்திய ஆயுத போலீஸ் படைகள்) பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும் என்றும் சுனில் அரோரா கூறினார்.


அனைத்து முக்கியமான மற்றும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெறும் நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் ஏற்கனவே முன்னெச்சரிக்கை அடிப்படையில் பாதுகாப்புப் பணிக்காக குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.


ALSO READ | உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டது


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR