Consecration ceremony: அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கில் சனாதன விதிமுறைகள் பின்பற்றப்படுமா?
Ram Mandir Inauguration: ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் குடமுழக்கு விழாவில் சாஸ்திர சம்பிரதாயங்கள் பின்பற்றப்படவில்லையா? விவரங்களும் விளக்கமும்
அயோத்தியில் கட்டப்பட்டுவரும் ராமர் கோவில் குடமுழுக்கு விழாவுக்கான நாள் நெருங்கிக் கொண்டு வரும் நிலையில், சர்ச்சைகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கப்போவதில்லை என்றும், இந்த நிகழ்வை நடத்துவதற்கான முறையான சாஸ்திர சம்பிரதாயங்கள் பின்பற்றப்படவில்லை என்றும் மதத் தலைவர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருவது பாஜகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டு வீரர்கள், திரையுலக நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், ஆன்மீகத் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்கின்றனர். அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமருக்கு கோயில் அமைவதற்கு பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. இந்த குடமுழுக்கு விழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 7,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
சர்வதேசம் முழுவதும் கோவில் கும்பாபிஷேகத்திற்காக அழைப்புகள் விடப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் மற்றும் சமாஜ்வாதி கட்சி என பல அரசியல் கட்சிகள் புறக்கணித்துள்ளன.
மேலும் படிக்க | அயோத்தி ராமர் கோயில்... திறக்கவே இல்லை அதற்குள் பெரிய மோசடி புகார் - பின்னணி என்ன?
இந்த நிலையில், நாட்டின் முக்கிய இந்து மதத் தலைவர்களில் ஒருவரும், ஒடிசாவில் அமைந்துள்ள பூரி மடத்தின் சங்கராச்சாரி சுவாமி நிச்சலானந்தா சரஸ்வதி உள்ளிட்ட நான்கு சங்கராச்சாரியர்கள் இந்த குடமுழுக்கு விழாவில் கலந்துக் கொள்வதில்லை என்று அறிவித்துள்ளனர். அதற்கு காரணமாக அவர்கள் சொல்வது என்னவென்றால் ஆகம விதிமுறைகளின்படி கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை என்பதாக இருக்கிறது.
ஜோதிர் மடத்தின் 46வது சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரனந்த் சரஸ்வதி, இந்த முடிவை அறிவித்தார். பிரதமர் மோடி கருவறையில் இருந்து சிலையைத் தொட்டு பிரதிஷ்டை செய்வார் என்பது, ஒரு கும்பாபிஷேகத்தைப் போல இல்லை. இந்த நிகழ்வுக்கு அரசியல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
இந்த கோவில் கும்பாபிஷேகத்தை நாங்கள் எதிர்க்கவும் இல்லை, அதில் கலந்து கொள்ளவும் மாட்டேன். அனைத்து நிகழ்வுகளும் சுமுகமாக நடக்க வேண்டும் விரும்புவதாக அவர்கள் தெரிவித்துவிட்டனர்.
"மோடி எதிர்ப்பு"
இந்த புறக்கணிப்பை "மோடி எதிர்ப்பு" என்று பொருள் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, மாறாக அவர்கள் "சாஸ்திரங்களுக்கு எதிரானவர்களாக" இருக்க விரும்பாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சங்காராச்சாரியர்கள் கருதுவதாக கூறப்படுகிறது.
மத நூல்களைப் பின்பற்றுவதும், அவை முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதும் சங்கராச்சாரியார்களின் கடமை என்று கூறும் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரனந்த் சரஸ்வதி, கோயில் கட்டும் பணி முடிவதற்குள் கும்பாபிஷேகம் நடத்துவது, சாஸ்திரங்களுக்கு குந்தகம் விளைவிக்கும் செயல், இப்படி அவசரமாக குடமுழுக்கு செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று கேட்கிறார்.
அரசியல் நிகழ்ச்சியாக மாற்றப்படும் குடமுழுக்கு
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக சில நாட்களுக்கு முன்னதாக கருத்து தெரிவித்த பூரி சங்கராச்சாரியார் நிச்சலானந்த சரஸ்வதி, "தனது பதவியின் கண்ணியத்தை உணர்ந்ததால்" விழாவைத் தவிர்ப்பதாகக் கூறினார். அதற்கு அவர் சோன விளக்கம் இது தான்...
மேலும் படிக்க | அயோத்தியில் புதிய விமான நிலையம் திறப்பு
"நான் அங்கு என்ன செய்வது? இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிலையைத் திறந்து வைக்கும் போது, அங்கு சங்கராச்சாரியர்கள் என்ன செய்வார்கள்? அங்கு நின்று கைதட்டலாமா? எனக்கு பதவி வேண்டாம். என்னிடம் ஏற்கனவே மிகப் பெரியது உள்ளது…”
“ராமரின் சிலையை பிரதிஷ்டை செய்வது அர்ச்சகர்கள் மற்றும் சாதுக்களின் பொறுப்பு. அதற்கு ஏன் இவ்வளவு அரசியல்வாதிகள்? என்றும், “வரவிருக்கும் பொதுத் தேர்தல்கள் காரணமாக இந்த நிகழ்வுக்கு மிகவும் அவசரம் காட்டப்படுகிறது. அரசியல் சாயம் பூசப்படுகிறது இது ஏற்புடையதல்ல…” என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அயோத்தியில் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரமாக உள்ளன. இன்னும் சில நாட்களில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, ராம் லல்லா எனப்படும் குழந்தை ராமர் அங்கு குடியேற காத்துக் கொண்டிருக்கிறார். கோவில் குடமுழக்கு விழா உலக அளவில் பேசுபொருளாக இருக்கிறது.
மேலும் படிக்க | Ram temple: அயோத்தி ராமர் கோவிலுக்கு இதுவரை எவ்வளவு நன்கொடை கிடைத்துள்ளது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ